பாஸ்வேர்டு இல்லாத முறைகளை அறிமுகப்படுத்தும் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள்… காரணம் என்ன???

Author: Hemalatha Ramkumar
7 May 2022, 7:11 pm
Quick Share

பாஸ்வேர்ட் இல்லாத டிஜிட்டல் எதிர்காலம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது என்றே கூறலாம்! ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகியவை FIDO அலையன்ஸ் மற்றும் உலகளாவிய வலை கூட்டமைப்பு உருவாக்கிய தரநிலையின் அடிப்படையில் பாஸ்வேர்ட் இல்லாத திட்டங்களை அறிவித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களாக உள்ள ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் ஆகியவை உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான சாதனங்களுக்கு பாஸ்வேர்ட் இல்லாத லாகின் திட்டங்களை அறிவித்துள்ளன.

பாஸ்வேர்ட் இல்லாத சுற்றுச்சூழல் அமைப்பைத் தழுவிய முதல் நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் ஒன்றாகும். செப்டம்பர் 2021 இல் பயனர்களை பாஸ்வேர்ட்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு ஆத்தென்டிகேட்டர் ஆப்பிற்கு (Authenticator App) மாறுமாறு வலியுறுத்தியது. 2020 ஆம் ஆண்டில், விண்டோஸில் 150 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாஸ்வேர்ட்களுக்குப் பதிலாக கைரேகைகள் அல்லது முக அங்கீகாரத்தைப் (Face recognition) பயன்படுத்தினர்.

பயனர்கள் இப்போது தங்கள் ஆப்பிள் சாதனங்கள் மற்றும் கணக்குகளில் தங்கள் பயனர்பெயரை உறுதிசெய்து, பின்னர் அவர்களின் அடையாளத்தை ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடி மூலம் சரிபார்க்கலாம்.

சமீபத்தில், கூகுள் பயனர்களுக்கு 2023க்குள் பாஸ்வேர்ட் இல்லாத லாகின் முறைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் அறிவித்தது.
FIDO ஸ்டாண்டர்டுக்கான ஆதரவை விரிவுபடுத்துவதன் மூலம், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் ஆகியவை பயனர்களை பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தாமல் தங்கள் சாதனங்களில் உள்நுழைய அனுமதிக்கும். அதற்குப் பதிலாக கைரேகை, முகம் அல்லது சாதன PIN போன்ற பிற முறைகளைப் பயன்படுத்தலாம்.

இது பயனர்கள் ஃபிஷிங் முயற்சிகளுக்கு எளிதில் இரையாகாமல் இருப்பார்கள். கூடுதலாக, பாஸ்வேர்ட்கள் திருடப்படுவதையும் இது கட்டுப்படுத்தும்.

Views: - 2981

0

0