பயனர்களுக்கு உதவ புதிய வசதிகளுடன் வண்ணமயமாக மாறிய கூகிள் மேப்ஸ் | புதிய அம்சங்கள் என்னென்ன? கூடுதல் விவரங்கள் அறிக
20 August 2020, 11:18 amகூகிள் மேப்ஸ் உலகின் மிகவும் பிரபலமான மேப்ஸ் சேவைகளில் ஒன்றாகும். புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும்போது புதிய இடங்களைச் சரியாக கண்டுபிடிக்கவும், குறுகிய காலத்தில் போய் சேர வேண்டிய இடத்தை அடையவும் இந்த கூகிள் மேப்ஸ் பெரிதும் உதவியாக இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு, கூகிள் ஒரு வரைபட மறுவடிவமைப்பை அறிவித்தது, இது பயனர் அனுபவத்தை மேலும் சிறப்பாக்க உதவும். தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் புதிய வண்ண மேப்பிங் வழிமுறை மற்றும் விரிவான தெரு வரைபடங்கள் ஆகியவை இந்த சில முக்கியமான அம்சங்கள் ஆகும். கூகிள் மேப்ஸ் செயலியில் வரவிருக்கும் முக்கியமான மேம்பாடுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வரவிருக்கும் புதுப்பிப்பில் மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால், வரைபடங்கள் இப்போது சுற்றுச்சூழலில் உள்ள இயற்கை அம்சங்களை நன்றாக வேறுபடுத்தி அடையாளம் காணும். “இயற்கை அம்சங்கள்” என்று நாம் கூறும்போது, பனிக்கட்டிகள், கடற்கரைகள், காடுகள் அல்லது பாலைவனங்கள் அருகில் இருந்தால் காண்பிக்கும். வரைபடத்தின் இந்த புதிய பதிப்பு 220 நாடுகளில் கிடைக்கும் என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஸ்ட்ரீட் மேப்ஸ் போன்றவற்றையும் மேம்படுத்துவதாக கூகிள் தெரிவித்துள்ளது.
கூகிள் தனது புதிய வண்ண மேப்பிங் வழிமுறை வெவ்வேறு நிலப்பரப்புகள் மற்றும் அடர்ந்த காடுகள் மற்றும் பனி சிகரங்கள் அல்லது பசுமையான வயல்கள் மற்றும் மணல் கடற்கரைகள் போன்ற நிலங்களை வேறுபடுத்தி காண்பிப்பதை எளிதாக்குகிறது என்று கூறுகிறது.
இதனுடன், கூகிளின் புதிய ஸ்ட்ரீட் மேப்ஸ் இப்போது ஒரு சில நகரங்களில் மேலும் விரிவாக இருக்கும். நடைபாதைகள், பாதசாரிகள் நடக்கும் இடங்கள், சாலைகள் மற்றும் குறுக்குவழிகள் ஆகியவற்றையும் காண்பிக்கும். புதிய வடிவமைப்பு சாலைகளின் அகலத்தையும் வடிவத்தையும் துல்லியமாகக் காட்ட முடியும்.
இதற்கிடையில், கூகிள் அதன் “மேப்ஸ் கேம்” (Maps game) அம்சத்தையும் முயற்சித்து வருகிறது. கடந்த மாதம், ஆப்பிள் மேப்ஸ் தனது செயலியில் டவுன்கள் மற்றும் நகரங்களுக்கான மேம்படுத்தப்பட்ட விவரங்கள் போன்ற மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.
இந்த வார இறுதியில் இந்த அம்சங்கள் வெளிவரும் என்று கூகிள் தெரிவித்துள்ளது. இருப்பினும், மேம்படுத்தப்பட்ட ஸ்ட்ரீட் மேப்ஸ் வரவிருக்கும் மாதங்களில் வெளியிடப்படும், மேலும் காலப்போக்கில் அதிகமான நகரங்களையும் இந்த அம்சங்களுடன் சேர்க்க கூகிள் திட்டமிட்டுள்ளது.