கூகிள் மீட்டிள் இப்படி ஒரு அம்சம் கிடைக்கும் என்று நீங்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டீர்கள்!!!

Author: Hemalatha Ramkumar
23 October 2021, 2:49 pm
Quick Share

தற்போது கூகிள் மீட் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இது ஹோஸ்ட்கள் அந்த மீட்டிங் எப்படி நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அனுமதிக்கும். பிற பங்கேற்பாளர்களின் மைக்ரோஃபோன்கள் அல்லது கேமராக்களை இனி ஹோஸ்டினால் டிசேபிள் செய்ய முடியும். மேலும் ஹோஸ்ட் முடிவு செய்யும் வரை பங்கேற்பாளர்களால் அதனை எனேபிள் செய்ய முடியாது. நிறுவனம் இந்த அறிவிப்பை Workspace வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

மீட்டிங்கில் சில அடாவடி பங்கேற்பாளர்கள் குறுக்கிடுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் கூகுள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மைக்ரோஃபோன் மற்றும் கேமரா லாக் அம்சம் டிஃபால்டாக ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. ஒரு வேளை, ஹோஸ்ட்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அவர்கள் அதை மீட்டிங்குகளின் போது இயக்க வேண்டும்.

உங்கள் மீட்டிங்கில் பிரேக்-அவுட் அறைகள் இருந்தால், ஆடியோ அல்லது வீடியோ லாக்குகள் அவற்றிற்கும் பொருந்தும். மேலும், தனித்தனி பிரேக்-அவுட் அறைகளில் பயன்படுத்தப்படும் லாக்குகள் மற்ற பிரேக்-அவுட் அறைகளையோ அல்லது பிரதான அறையையோ பாதிக்காது.

iOS மற்றும் ஆன்டுராய்டு பயன்பாடுகளின் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தி ஹோஸ்ட் லாக் அம்சத்தை இயக்கினால், அவர்கள் மீட்டிங்கில் இருந்து அகற்றப்படுவார்கள்.

கூடுதலாக, மீட்டிங்கிற்கு முன்னதாக பூட்டுகள் இயக்கப்பட்டு, பயனர்கள் பயன்பாட்டின் பழைய பதிப்புகளை மட்டுமே அணுகினால், அவர்களால் மீட்டிங்கில் சேர முடியாது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெஸ்க்டாப்/லேப்டாப் சாதனங்களில் கூகுள் மீட்டில் ஹோஸ்ட் அனைவரையும் ஒரே நேரத்தில் மியூட் செய்யும் திறனை கூகுள் அறிவித்தது.

அனைத்து Google Workspace பயனர்களும் இந்த அம்சத்திற்கான அணுகலைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூகுள் ஏற்கனவே இந்த அம்சத்தை ரேபிட் ரிலீஸ் டிராக்குகளில் உள்ள பயனர்களுக்காக வெளியிடத் தொடங்கியுள்ளது. மேலும் இது நவம்பர் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்ட வெளியீட்டு பாதையில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

Views: - 397

0

0