மீட் பயனர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை சொன்னது கூகிள்!

30 September 2020, 9:04 am
Google Meet users can host calls longer than 60 minutes for free until March 2021
Quick Share

இப்போது வரை, கூகிள் பயனர்கள் கூகிள் மீட் வீடியோ அழைப்பு சேவையை இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கொள்கை செப்டம்பர் 30 ஆம் தேதியோடு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது மார்ச் 31, 2021 வரை 60 நிமிடங்களுக்கும் மேலாக இலவச கூகிள் மீட் அழைப்புகளை ஹோஸ்ட் செய்ய கூகிள் பயனர்களை அனுமதிக்கும். 

கூகிள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூகிள் மீட் பயன்பாட்டை அனைவருக்கும் இலவசமாக்கியது. நிறுவனம் செப்டம்பர் 30 வரை வரம்பற்ற அழைப்புகளைச் செய்ய அனுமதித்தது (இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது). வரம்பற்ற அழைப்புகள் 24 மணிநேர வரம்பைக் கொண்டிருக்கும். இப்போது இது மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இது குறித்த அறிவிப்பை வெளியிடுகையில் மீட் பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சில அம்சங்களையும் கூகிள் சுட்டிக்காட்டியது. உதாரணமாக, பயனர்கள் இப்போது தங்கள் டிவியிலேயே கூகிள் மீட் அழைப்புகளை கேஸ்ட் செய்ய முடியும். பயனர்கள் நெஸ்ட் ஹப் மேக்ஸ் மூலம் மீட் தளத்தையும் அணுகலாம். பேக் கிரவுண்ட் பிளர் மற்றும் டிஜிட்டல் ஒயிட் போர்டு ஆகியவை பிற சமீபத்திய அம்சங்களில் அடங்கும்.

கூகிள் மீட் சமீபத்தில் ஒரு மீட்டிங்கில் 49 பேரைச் சேர்க்கும் அம்சத்தையும் சமீபத்தில் சேர்த்தது. ஆட்டோ மற்றும் டைல்டு மோட்ஸ் மூலமும் நீங்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த அம்சம் ஜி சூட் மற்றும் தனிப்பட்ட பயனர்களுக்கு வரும் வாரங்களில் கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல், கூகிள் மீட் பயன்பாட்டில் வீடியோ சந்திப்புகளுக்கான சத்தம் ரத்துசெய்தல் அம்சத்தையும் கூகிள் உருவாக்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு இந்த அம்சம் வெளிவருகிறது. இது ஆரம்பத்தில் ஜி சூட் எண்டர்பிரைஸ் ஃபார் எஜுகேஷன் மற்றும் ஜி சூட் எண்டர்பிரைஸ் பயனர்களுக்கு கிடைக்கும்.

Views: - 1

0

0