அமெரிக்காவில் இருந்தும் கூட நொடியில் பண பரிவார்த்தனைச் செய்யலாம்! Google Pay இல் புதிய அம்சம்!

12 May 2021, 4:54 pm
Google Pay allows international money transfers from US to Singapore, India
Quick Share

கூகிள் பே இப்போது அமெரிக்காவில் இருக்கும் பயனர்களிடமிருந்து சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு பரிவர்த்தனைகளை அனுமதிக்க புதிய வசதிகளைச் சேர்க்க உள்ளது. வைஸ் மற்றும் வெஸ்டர்ன் யூனியன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச பணப் பரிமாற்றத்தை இது அனுமதிக்க கூகிள் பே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க கூகிள் பே பயனர்கள் வெஸ்டர்ன் யூனியன் மூலம் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களில் உள்ளவர்களுக்கும், வைஸ் மூலம் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் பணம் அனுப்ப முடியும் வசதியைச் சேர்க்க கூகிள் எதிர்பார்க்கிறது.

பண பரிமாற்றங்கள் தற்போது அமெரிக்காவிலிருந்து இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் பணத்தை அனுப்ப, நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் Google Pay பயனரைத் தேடி, “Pay” எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, வெஸ்டர்ன் யூனியன் அல்லது வைஸ் ஏதேனும் ஒன்றின் மூலம் பணம் அனுப்ப முடியும்.

ஜூன் 16 வரை, வெஸ்டர்ன் யூனியன் கூகிள் பே மூலம் பணம் அனுப்பும்போது வரம்பற்ற இலவச பரிமாற்றங்களை வழங்கும், வைஸ் மூலம் பணம் அனுப்பும் புதிய வாடிக்கையாளர்களுக்கு $500 முதல் பரிமாற்றம் இலவசமாக கிடைக்கும் என்று கூகிள் கூறுகிறது.

வெஸ்டர்ன் யூனியன், பெறுநர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்றும் அமெரிக்க பயனரால் அனுப்பப்படும் தொகையை அப்படியே பெற முடியும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் வைஸ்  மூலம் பணம் செலுத்தும் போது அந்நிய செலாவணி வீதத்தையும் கூடுதல் பரிமாற்றக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று வைஸ் தெரிவித்துள்ளது. இது ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும்.

Views: - 170

0

0