ப்ளே ஸ்டோர் கட்டணங்களை பாதியாக குறைத்த கூகிள் நிறுவனம்!!!

Author: Hemalatha Ramkumar
22 October 2021, 2:50 pm
Quick Share

ஆல்ஃபாபெட் இன்க்-க்குச் சொந்தமான கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சந்தா அடிப்படையிலான செயலிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை முதல் நாளிலிருந்து 15 சதவிகிதமாகக் குறைப்பதாக வியாழக்கிழமை அன்று நிறுவனம் கூறியது.

தற்போது, ​​டெவலப்பர்கள் முதல் ஆண்டில் 30 சதவிகிதம் சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு 15 சதவிகிதம் செலுத்தினால் போதும்.
இந்த புதிய அமைப்பு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கும் மற்றும் டெவலப்பர்களை ஒரு முறை கட்டண முறைகளிலிருந்து சந்தாக்களுக்கு மாற ஊக்குவிக்கும்.

E-புக் நிறுவனங்கள் மற்றும் டிமாண்டில் உள்ள மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகள், அவற்றின் விற்பனையின் பெரும்பகுதியை உள்ளடக்கச் செலவுகளுக்குப் பயன்படுத்துகின்றன. ஆனால் இனி
10 சதவீதத்திற்கும் குறைவான சேவை கட்டணத்திற்கு தகுதியுடையவர் ஆகிறார்கள்.

கூகிள் நிறுவனமானது மைக்ரோசாப்ட் கார்ப், ஸ்பாட்டிஃபை டெக்னாலஜி SA மற்றும் ஸ்டார்ட்அப் மற்றும் சிறிய நிறுவனங்கள் போன்றவற்றின் விமர்சனத்திற்கு உள்ளானது. கூகிள் பயன்பாட்டு விலையை உயர்த்துகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.

மார்ச் மாதத்தில், கூகுள் தனது ஆப் ஸ்டோரில் உள்ள டெவலப்பர்களிடம் வசூலிக்கும் சேவை கட்டணத்தை பாதியாகக் குறைப்பதாக கூறியது. ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இன்க் இது போன்ற ஒரு முறையை பின்பற்றுகிறது.

Views: - 330

0

0