கிட்டார் ட்யூனர் அம்சத்தை வெளியிட்ட கூகுள்…நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!!!

Author: Hemalatha Ramkumar
9 October 2021, 3:44 pm
Quick Share

ஸ்மார்ட்ஃபோன்களால் தகுதியான ட்யூனிங் ஆப் அல்லது கூகுள் அசிஸ்டண்ட்டை உபயோகிப்பதன் மூலம் வழங்கப்பட்ட செயல்பாட்டிற்கு நிச்சயமாக நீங்கள் நன்றி கூற வேண்டும்.இதன் மூலம் உங்கள் கிட்டாரை ட்யூனிங் செய்வது எப்போதையும் விட எளிதானது. பயனர்களுக்கு இந்த செயல்முறையை இன்னும் எளிதாக்கும் என்று கூகிள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனம் தேடலுக்குள் ஒரு வண்ணமயமான ட்யூனரை அறிமுகப்படுத்துகிறது.

கூகிள் ஏற்கனவே இந்த புதிய தேடல் அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. இதனை கிட்டத்தட்ட எந்த சாதனத்திலும் இருந்தும் அணுக முடியும். இதற்கு முன்பாக பயனர்கள் கூகிள் அசிஸ்டண்ட் செயல்பாட்டைப் பயன்படுத்தி தங்கள் கிட்டாரை டியூன் செய்யலாம். ஆனால் இதற்கு கூகுள் அசிஸ்டண்ட் அணுகும் ஒரு சாதனம் தேவைப்படுகிறது.

ஆனால் தற்போது இந்த புதிய அம்சத்தின் மூலமாக ஒருவர் மொபைல் அல்லது டெஸ்க்டாப்பில் செர்ச் பாக்ஸில் டைப் செய்வதன் மூலமாகவே இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தலாம். அதாவது “Google Tuner” என்று டைப் செய்தாலே அது முடிவுகள் பக்கத்தின் மேலே தோன்றும்.

உங்கள் கருவியைக் கேட்க நீங்கள் பயன்படுத்தும் சாதனம் ஒரு செயல்பாட்டு மைக்ரோஃபோனைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக ட்யூனர் அம்சத்தை அணுகுவதற்கு நீங்கள் அனுமதி வழங்க வேண்டும்.

முன்னர் கூறியபடி இந்த அம்சத்தின் செயல்திறனானது நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் ஒலிவாங்கியைப் பொறுத்தது என்று கூகுள் கூறுகிறது. சில சாதனங்களுக்கு நீங்கள் சத்தமாக அல்லது அதற்கு மிகவும் நெருக்கமாக சென்று வாசிக்க வேண்டியிருக்கும் என்றாலும், இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் போது கணினிகளை விட ஸ்மார்ட்போன்கள் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்யூனர் பயனர்களுக்கு அவர்களின் கருவி டியூனில் உள்ளதா அல்லது ஒரு விஷ்வல் இன்டிகேட்டர் உதவியுடன் சரிசெய்யப்பட வேண்டுமா என்று தெரிவிக்கும். மேலும் கூகிள் “Hum to Search” உட்பட மற்ற இசை தொடர்பான அம்சங்களையும் வழங்குகிறது. இது நீங்கள் மனதில் நினைத்த பாடல்களை அடையாளம் காண உதவும்.

Views: - 338

0

0