இந்தியாவில் கூகிள் மூலம் பணம் சம்பாதிக்க TaskMate…. இப்போது சோதனை கட்டத்தில்!

23 November 2020, 1:12 pm
Google Task Mate App That Lets You Earn Money Likely Under Testing In India
Quick Share

கூகிள் இந்தியா நிறுவனம் புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இது இந்தியாவில் பயனர்களுக்கு பணம் சம்பாதிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. பீட்டா பதிப்பில் இருக்கும் இந்த டாஸ்க் மேட் (TaskMate) எனும் செயலியைக் கூகிள் நிறுவனம் சோதித்து  வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயலி பயனர்களுக்கு பணம் சம்பாதிக்க பல பணிகளை வழங்குவதாகவும், பணத்தை அவ்வப்போது பெற்றுக்கொள்வதற்கான வசதியைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூகிள் டாஸ்க் மேட் – ஆப் விவரங்கள்

9to5Google தளத்தின் வழியாக வெளியான ஒரு ரெடிட் இடுகையின் படி, கூகிள் டாஸ்க் மேட் பயன்பாட்டில் உள்ள பணிகள் எளிமையானவை மற்றும் உலகெங்கிலும் உள்ள வணிகங்களிலிருந்து பெறப்படும். இந்த பணிகள் “Sitting or Field” அதாவது “உட்கார்ந்து வேலைச் செய்தல் அல்லது களத்தில் பணிகளை முடித்தல்” என வகைப்படுத்தப்படும். 

பயன்பாட்டில் உள்ள சில உட்கார்ந்த இடத்தில் செய்யும் பணிகளில் ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்திலிருந்து உங்கள் உள்ளூர் மொழிக்கு மொழிபெயர்ப்பது மற்றும் வாக்கியங்களை பேசி பதிவு செய்தல் போன்றவை அடங்கும். மறுபுறம், மேப்பிங் விவரங்களை மேம்படுத்துவது, கடைகளின் புகைப்படங்களை எடுப்பது போன்றவை களப் பணிகளில் அடங்கும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

இப்போது பீட்டா கட்டத்தில் சோதனைப் பதிப்பில் இருக்கும் இந்த செயலி எப்போது எல்லோருக்கும் வெளியாகும், என்னென்ன  பணிகள் இருக்கும், யாருக்கெல்லாம் இந்த பணிகள் கிடைக்கும், பணியில் சேர்வதற்கான ஆளெடுப்பு நடைமுறைகள் என்னென்ன, பணத்தைப் பெறுவது எப்படி போன்ற விவரங்களை எல்லாம் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை கூடுதல் செய்திகளுக்கு Updatenews360 உடன் இணைந்திருங்கள்.

Views: - 0

0

0