இனிமே இந்த போன்களில் எல்லாம் எந்த கூகிள் சேவையும் வேலைச் செய்யாது! உங்க போனும் லிஸ்ட்ல இருக்கான்னு பாருங்க

By: Dhivagar
2 August 2021, 12:56 pm
Google To End Support For Android V2.3.7 And Lower
Quick Share

கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு OS தான் அதிக அளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் இயக்க முறைமைகளில் (operating system) ஒன்று என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. HTC ட்ரீம் அல்லது T-மொபைல் என்பதுதான் ஆண்ட்ராய்டு OS உடன் இயங்க ஆரம்பித்த முதல் ஸ்மார்ட்போன் ஆகும். அப்போதிருந்து கூகிள் நிறுவனம் ஆன்ட்ராய்டு OS இன் பல பதிப்புகளை வெளியிட்டுள்ளது.

படிப்படியாக அப்டேட் செய்யப்பட்டு இப்போது ஆண்ட்ராய்டு 12 பதிப்பு வரை வந்துள்ளது. அப்டேட் ஆகிவரும் அதே வேளையில் பழைய ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கான சேவைகளையும் கூகுள் நிறுவனம் நிறுத்தி வருகிறது.  அதையடுத்து சமீபத்தில் வெளியான தகவலின்படி, கூகிள் அடுத்த மாதம் தொடங்கி பல பழைய ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கு சேவைகளை வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. உங்கள் சாதனமும் இந்த பட்டியலில் இடம் பெறுகிறதா? என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

Google சேவைகளை ஆதரிக்காத Android பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

முதல் தலைமுறை ஆண்ட்ராய்டு 1.0, ஆண்ட்ராய்டு 1.1, 1.5 கப்கேக் மற்றும் 1.6 டோனட் உள்ளிட்ட பல பழைய ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கான ஆதரவை கூகுள் நிறுத்திவிடும் .

இவை தவிர, நிறுவனம் ஆண்ட்ராய்டு 2.0 எக்லேர், ஆண்ட்ராய்டு 2.2 ஃப்ரோயோ மற்றும் 2.3 ஜிஞ்சர்பிரெட் உள்ளிட்ட இரண்டாவது ஜென் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் ஆதரவை நிறுத்திவிடும். செப்டம்பர் 27, 2021 முதல் இந்த ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கான ஆதரவு முடிவடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் சப்போர்ட் கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

பழைய ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கான ஆதரவை கூகுள் நிறுத்தியவுடன், கூகிள் சம்பந்தமான சேவைகளும் செயல்படுவது நின்றுவிடும். ஆண்ட்ராய்டு 2.3 மற்றும் அதற்கு மேற்பட்ட சாதனங்களில் இயங்கும் சாதனங்களில் ஜிமெயில், பிளே ஸ்டோர் மற்றும் யூடியூப் போன்ற எந்தவொரு கூகிள் சேவைகளும் கிடைக்காது.

கூகுள் செயலிகளைப் பயன்படுத்தவும் முடியாது, பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழையவும் முடியாது. எனவே, நீங்கள் இன்னும் விண்டேஜ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், கூகிள் சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பிற்கு மாறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆண்ட்ராய்டு V3.0 அல்லது அதற்கு மேல் இயங்கும் ஸ்மார்ட்போன்களை வாங்குவது நல்லது.

ஏன் புதிய அப்டேட்டுக்கு மாற வேண்டும்?

பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவே கூகுளின் சமீபத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆன்லைன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புதிய ஃபார்ம்வேர் புதுப்பிப்புகளுடன் நிறுவனம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறது. புதிய தலைமுறை ஆண்ட்ராய்டு OS ‘புதிய பிழைகள் மற்றும் பழைய அச்சுறுத்தல்களைக் கையாளக்கூடிய மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.

Views: - 242

0

0