காற்று மாசுபாட்டை குறைக்கும் முயற்சியாக ‘கிரீன் டெல்லி’ மொபைல் செயலி அறிமுகம்

7 November 2020, 1:32 pm
'Green Delhi' mobile app launched by Delhi CM to check air pollution.
Quick Share

டெல்லி அரசாங்கம் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதிய முயற்சியாக ‘கிரீன் டெல்லி’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த  செயலியின் மூலம், குடியிருப்பாளர்கள் காற்று மாசுபாடு விதிமுறைகளை மீறுவது தொடர்பான புகார்களை சமர்ப்பிக்க முடியும்.

மாசுபாட்டை  குறைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் புகார் தெரிவிக்கவும் இதில் வசதிகள் உள்ளது. டெல்லி அரசாங்கத்தின் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஏழு அம்ச திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த செயலியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார்.

குடியிருப்பாளர்கள் தங்கள் புகார்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் தெரிவிக்க முடியும். ஒவ்வொரு புகாருக்கும் ஒரு தனிப்பட்ட குறியீடு ஒதுக்கப்படும், இதன் மூலம் குடியிருப்பாளர்கள் அதன் நிலையை கண்காணிக்க முடியும். 

சரியான நேரத்தில் பிரச்சினையைத் தீர்க்கத் தவறினால் சம்பந்தப்பட்ட நோடல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நோடல் அதிகாரிகளுக்கு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. பசுமை டெல்லி செயலியின் மூலம் கழிவுகள், தொழில்துறை மாசுபாடு, தூசி போன்றவற்றை எரிப்பது பற்றி மக்கள் ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்க முடியும்.

Views: - 18

0

0