சுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் பதிவிறக்கம் செய்து பகிர்வது எப்படி?

15 August 2020, 9:09 am
Happy Independence Day 2020: WhatsApp Stickers to download, share with your friends, family
Quick Share

இந்தியா தனது 74 வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் எல்லாம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் கொண்டாட்டங்களில் எல்லோரும் ஒன்று சேர ஒரு பிரபலமான வழி உள்ளது. வேறொன்றும் இல்லை அது வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் தான்.

வாட்ஸ்அப் செயலியின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள். பல சந்தர்ப்பங்களுக்கு  ஏற்றாவாறு தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டிக்கர்களின் பெரிய தொகுப்பை வாட்ஸ்அப் வழங்குகிறது. 

சுதந்திர தின திருநாளான இந்நாளில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பதிவிறக்கம் செய்து பகிர்ந்து கொண்டு சுதந்திர தின மாண்பைப் போற்றி புகழலாம். வாட்ஸ்அப் சுதந்திர தின ஸ்டிக்கர்களை எவ்வாறு பெறுவது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இதோ உங்களுக்கு உதவத் தான் இந்த பதிப்பு.

சுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?

 • வாட்ஸ்அப்பில் ஏதேனும் ஒரு அரட்டையைத் (Chat) திறக்கவும்.
 • உரை பட்டியில் (Text Bar) உள்ள ஈமோஜி ஐகானைத் தட்டவும்.
 • பட்டியலில் மூன்றாவதாக இருக்கும் ஒரு ஸ்டிக்கர் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
 • பின்னர் கிடைக்கக்கூடிய ஸ்டிக்கர்களின் மேல் அமைந்துள்ள ‘+’ ஐகானைக் கிளிக் செய்க.
 • இங்கே, வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்குகளின் பட்டியலைக் காண்பீர்கள்.
 • கீழே ஸ்கிரோல் செய்து “மேலும் ஸ்டிக்கர்களைப் பெறு” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
 • நீங்கள் Google Play Store க்கு திருப்பி விடப்படுவீர்கள்.
 • இப்போது தேடல் பட்டியில் Independence Day WAStickerApp என டைப் செய்க.
 • சுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களின் நீண்ட பட்டியலைக் காண்பீர்கள்.
 • நீங்கள் பட்டியலில் உலாவலாம் மற்றும் நீங்கள் பதிவிறக்க விரும்பும் ஸ்டிக்கர் பேக்குகளைத் தேர்ந்தெடுக்கலாம். 
 • இந்த வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை நிறுவியதும் அவை தானாகவே பயன்பாட்டில் சேர்க்கப்படும். 
 • நீங்கள் பதிவிறக்கிய சுதந்திர தின ஸ்டிக்கர்களைக் கண்டுபிடிக்க அதே செயல்முறையைப் பின்பற்றலாம்.

வாட்ஸ்அப்பைத் தவிர, இந்திய ஆயுதப் படைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான ஒரு வழியாக சுதந்திர தினத்திற்கான சிறப்பு ஈமோஜியும் ட்விட்டரில் உள்ளது. சுதந்திர தினத்திற்காக ஒரு சிறப்பு ஸ்னாப்சாட் ஃபில்டரும் உள்ளது. 74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் Incredible India நிகழ்வில் PUBG மொபைல் கேமில் ரசிகர்கள் பங்கேற்கலாம்.