உங்கள் PUBG மொபைல் அக்கௌன்டை நிரந்தரமாக அழிக்க எளிய வழி இதோ!!!

31 July 2020, 9:33 pm
Quick Share

PUBG அதன் அருமையான விளையாட்டுக்காக இளைஞர்களிடையே பிரபலமாக விளையாடப்படும் ஒரு விளையாட்டு. இருப்பினும், இது ஒரு சிலரை இதற்கு அடிமையாக்குவது  மற்றும் ஒரு நபரின் நடத்தை பிரச்சினைகள், சமூக தனிமைப்படுத்தல்கள் மற்றும் கடுமையான நடத்தையை  ஏற்படுத்தி வருகிறது. எனவே, இதனை விளையாடுவது ஆபத்தாக தோன்றலாம். ஆனால் இது விளையாட்டின் தவறு மட்டுமல்ல, இது ஒரு தனிநபரின் தவறாகவும் இருக்கலாம். ஒரு சிலர் 7 முதல் 8 மணிநேரம் வரை PUBG மொபைல் விளையாடுவதாகக் கூறுகின்றனர். இதன் விளைவாக உண்மையில், உடல்நலம் மற்றும் மனநல பிரச்சினைகள் குறித்த பல்வேறு அறிக்கைகளுக்குப் பிறகு, இந்த விளையாட்டை விளையாடும்போது வீரர்கள் தங்கள் உடல்நிலை குறித்து விழிப்புடன் இருக்குமாறு PUBG கோரத் தொடங்கியுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் PUBG ஐ விளையாடுகிறார்கள். அவர்களில் பலர் இளம் வயதினர் ஆவர். இவ்விளையாட்டை விளையாடும் ஒரு சிலர் கடுமையாக நடந்து கொள்வது, கோபப்படுதல்  மற்றும் தற்கொலை பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இதற்கான  தீர்வு எளிது தான். 

ஒரு நபர் தனது வேலை மற்றும் விளையாட்டு நேரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் வாழ்க்கையில் நியாயமான அளவு சமநிலையை பராமரிக்க வேண்டும். இருப்பினும், PUBG மொபைல் கேம் கணக்கை அவரது ஸ்மார்ட்போனிலிருந்து நிரந்தரமாக நீக்குவது மற்றொரு ஆப்ஷன். உங்கள் தொலைபேசியிலிருந்து உங்கள் PUBG கணக்கை நிரந்தரமாக நீக்குவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

PUBG கணக்கை நிரந்தரமாக நீக்குவது எப்படி?

கணக்கை நீக்குவதற்கு நீங்கள் அந்த பயன்பாட்டை அழித்து விட்டால் போதும் என நினைத்து விடாதீர்கள். ஏனெனில் அதன் பிறகும் உங்கள் தகவல்கள் இன்னும் அதில் இருக்கும். எனவே, உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து PUBG ஐ முழுவதுமாக அகற்ற முழுமையான தீர்வை இங்கே பார்ப்போம்.

1. PUBG மொபைல் பயன்பாட்டைத் திறக்கவும்

2. லாபி திரையில், செட்டிங்ஸை குறிக்கும் கியர் பட்டனைக் காணலாம்.  அதைக் கிளிக் செய்க.

3. இப்போது, ​​பேசிக் என்ற விருப்பத்தைத் தட்டவும்.

4. பேசிக் டேபில், நீங்கள் லாக் அவுட் விருப்பத்தைக் காண்பீர்கள்.

5. அந்த விருப்பத்திற்கு அருகில் டெலீட் அக்கௌன்ட் என்ற ஒரு பட்டன் இருக்கும்.

6. நீங்கள் PUBG கணக்கை நீக்கத் தொடங்கும் போது,  PUBG மொபைல் கணக்கை நீக்க இந்த கோரிக்கை அல்லது செயல்முறையை அடுத்த ஏழு நாட்களுக்கு நீங்கள் விளையாட்டில் உள்நுழைவதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் கோரிக்கையின் செய்த வாரத்தின் நடுப்பகுதியில், உங்கள் கணக்கு PUBG சேவையகங்களிலிருந்து அகற்றப்படும்.

எனவே, இந்த வழியில் நீங்கள் உங்கள் PUBG மொபைல் கணக்கை நீக்கலாம் மற்றும் பல விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.