ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா HX, ஃபோட்டான்-HX மற்றும் NYX-HX ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்

16 October 2020, 4:40 pm
Hero Electric Optima HX, Photon-hx, and NYX-hx launched in India
Quick Share

ஹீரோ எலக்ட்ரிக், ‘சிட்டி ஸ்பீடு’ என்ற பெயரில் தனது புதிய இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது,. சிட்டி ஸ்பீடு வரம்பு அதிக பயண வேகத்தையும் தரத்தன்மையையும் வழங்குகிறது என்று நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சிட்டி ஸ்பீடு போர்ட்ஃபோலியோ மூன்று இ-ஸ்கூட்டர்கள்: ஆப்டிமா-HX, நைக்ஸ்-HX மற்றும் ஃபோட்டான்-HX ஆகியவற்றைக் கொண்டிருக்கும். புதிய இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் 25 மாநிலங்களில் 500+ ஹீரோ எலக்ட்ரிக் டீலர்ஷிப்பில் கிடைக்கும். சிட்டி ஸ்பீடு வரம்பின் விலை 57,560 ரூபாய் ஆகும். கூடுதல் மானியம் காரணமாக டெல்லி போன்ற இடங்களில் இ-ஸ்கூட்டர்கள் இன்னும் மலிவு விலையில் கிடைக்கும்.

சிட்டி ஸ்பீடு ரேஞ்சின் அறிமுகம் குறித்து பேசிய ஹீரோ எலக்ட்ரிக் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில், புதிய ரேஞ்ச் பைக்குகள் 70 கி.மீ முதல் 200 கி.மீ வரை ஓட்டுநர் வரம்பைக் கொண்டுள்ளன என்று கூறினார். இந்த பைக்குகள் பேட்டரிகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் போதுமான சக்தியையும் சிறந்த பொருளாதாரத்தையும் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

ICE வாகனங்களில் இருந்து மாறுவதற்கு தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளை அறிமுகப்படுத்த ஆர் அன்ட் டி துறையில் மேலும் முதலீடு செய்யப்போவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும், புதிய தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் தற்போது குறைவாக உள்ளது. வரும்  நாட்களில் கூடுதல் விவரங்கள் வெளியாகும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.