இருசக்கர வாகனங்களின் விலையை ஜூலை 1 முதல் உயர்த்த ஹீரோ மோட்டோகார்ப் திட்டம் | விவரங்கள் இங்கே

23 June 2021, 7:48 pm
Hero MotoCorp to hike prices of two-wheelers by up to ₹3,000 from July 1
Quick Share

ஜூலை 1, 2021 முதல் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்துவதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் இரு சக்கர வாகனங்கள் அனைத்து மாடல்களின் விலையிலும் ரூ.3,000 வரை உயர்த்தபோவதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆட்டோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, விலை உயர்வு ஒவ்வொரு மாடலுக்கு மாறுபடும் என்று தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகன உற்பத்தியாளர் தனது அறிக்கையில் கூறியது போல, மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவாக விலை உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.

பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிப்பதன் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்ய விலை உயர்வு அவசியம் என்று இரு சக்கர வாகன நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் மட்டும் விலை உயர்வை அறிவிக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி தனது கார்களின் விலையை உயர்த்துவதாக சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் மாதத்தில், பயணிகள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தன. இத்தகைய தொடர்ச்சியான விலை உயர்வு காரணமாக இந்திய வாகன சந்தையில் வாகன கொள்முதல் மந்தமாகவே உள்ளது.

Views: - 135

0

0