தொழிற்சாலைகளை மூட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முடிவு

21 April 2021, 3:39 pm
Hero MotoCorp to temporarily shut down all factories
Quick Share

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை தீவிரமடைவதை அடுத்து, தொற்றை எதிர்த்துப் போராடும் விதமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் அனைத்து ஆலைகளையும் தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது.

ஹரித்வார், தருஹேரா, குர்கான், நீம்ரானா மற்றும் வதோதராவில் உள்ள தனது ஆலைகளையும் மூட நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் ஏப்ரல் 22 முதல் மே 1 வரை சில நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாட்களைப் பயன்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய தொற்றுநோயின் இரண்டாவது அலையின் காரணமாக உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏற்படும் இழப்புகளை வரும் காலாண்டில் ஈடுசெய்ய முடியும் என்று குர்கானை தளமாகக் கொண்ட உற்பத்தி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Views: - 1312

0

0