பிஎஸ் 6 இணக்கமான ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கின் விலை கணிசமாக உயர்ந்தது! | புதிய விலையுடன் முழு விவரங்கள் அறிக
24 August 2020, 4:35 pmஹீரோ மோட்டோகார்ப் பிஎஸ் 6-இணக்கமான ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கின் விலையைத் திருத்தியுள்ளது மற்றும் பயணிகள் மோட்டார் சைக்கிள் மாடல் இப்போது ரூ.60,500 விலையில் கிடைக்கிறது. இந்த மாடல்களின் விலை இப்போது 150 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ் 6 இணக்கமான ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கின் மாறுபாடு வாரியான விலைகளை கீழே பாருங்கள்:
புதிய விலைப்பட்டியல்
- ஸ்ப்ளெண்டர் பிளஸ் கிக் ஸ்டார்ட்: ரூ.60,500 (முந்தைய விலை ரூ.60,350)
- செல்ஃப் ஸ்டார்ட் ஸ்ப்ளெண்டர் பிளஸ் : ரூ.62,800 (முந்தைய விலை ரூ.62,650)
- ஸ்ப்ளெண்டர் பிளஸ் செல்ஃப் ஸ்டார்ட் i3S: ரூ.64,010 (முந்தைய விலை ரூ.63,860)
இதற்கு முந்தைய விலை உயர்வு கடந்த மே மாதத்தில் நிகழ்ந்தது. அப்போது, பைக்கின் விலை ரூ.750 உயர்த்தப்பட்டது. விலை உயர்வு மோட்டார் சைக்கிளில் எந்தவித ஒப்பனை அல்லது இயந்திர மேம்பாடுகளையும் கொண்டு வரவில்லை.
இதனால், ஸ்ப்ளெண்டர் பிளஸ் தொடர்ந்து 97.2 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் இன்ஜினைப் பயன்படுத்துகிறது, இது 8,000 rpm இல் 7.8 bhp சக்தியையும் 6,000 rpm இல் மணிக்கு 8.05 Nm உச்சத் திருப்புவிசையையும் உற்பத்தி செய்கிறது.
ஸ்ப்ளெண்டர் பிளஸ் தவிர, ஹீரோ மோட்டோகார்ப் அதன் HF டீலக்ஸ் வரம்பின் விலையையும் திருத்தி, அதன் தொடரில் புதிய வகைகளைச் சேர்த்துள்ளது.
HF டீலக்ஸ் இப்போது ஐந்து வகைகளில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.48,000 முதல் தொடங்குகிறது. ப்ளெஷர் பிளஸ் மற்றும் டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களும் இந்த மாத தொடக்கத்தில் விலை உயர்வைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: அனைத்து விலைகளும் எக்ஸ்ஷோரூம் டெல்லி