ஹானர் மேஜிக்புக் 15 அடுத்த விற்பனை எப்போது? முக்கியமான விவரங்கள் இங்கே
1 December 2020, 9:01 pmதற்போதைய சந்தையில் புதிய லேப்டாப் ஒன்றை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஹானர் சில சிறந்த சாதனங்களை கொண்டுள்ளது. இந்த பட்டியலில் ரைசன் 5 குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படும் ஹானர் மேஜிக் புக் 15 அடங்கும். அல்ட்ரா மெல்லிய மடிக்கணினியாக, ஹானர் மேஜிக் புக் 15 பணிச்சூழலியல் அம்சங்களுடன் உள்ளது.
மேஜிக் புக் 15 கடந்த நவம்பர் 30 அன்றும் முதல் விற்பனையை நடத்தியது. இருப்பினும், மடிக்கணினி இப்போது சிறிது காலமாக கையிருப்பில் இல்லை. இதன் விலை ஒரே ஒரு மிஸ்டிக் சில்வர் மாடலுக்கு ரூ.42,990 ஆகும், இந்த சாதனம் தற்போது பிளிப்கார்ட்டிலும் ஹானர் இந்தியா இணையதளத்திலும் கிடைக்கவில்லை. புதிய லேப்டாப்பை வாங்க விரும்பினால், ஹானர் மேஜிக் புக் 15 மற்றும் அதன் அடுத்த விற்பனை தேதி பற்றிய முழுமையான விவரங்கள் இங்கே பார்க்கலாம் வாங்க.
ஹானர் மேஜிக் புக் 15 அடுத்த விற்பனை தேதி
பிளிப்கார்ட் அல்லது ஹானர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு நீங்கள் செல்லும்போது, ஹானர் மேக்புக் 15 கையிருப்பில் இல்லை என்பதை நீங்கள் காண முடியும். சாதனம் மீண்டும் எப்போது கிடைக்கும் என்பதற்கான புதுப்பிப்பை வழங்க இரண்டு பக்கங்களிலும் ‘Notify Me’ பொத்தான் இருக்கும். தெளிவாக கூறவேண்டுமெனில், 15 அங்குல ஹானர் மடிக்கணினி மீண்டும் எப்போது கிடைக்கும் என்பதில் திட்டவட்டமான புதுப்பிப்பு எதுவும் இல்லை.
ஹானர் இந்தியா வலைத்தளம் ஒரு நுட்பமான குறிப்பைக் கொண்டுள்ளது. ஹானர் மேஜிக் புக் 15 க்கான பக்கத்தில் டெலிவரி பொத்தான் உள்ளது, அங்கு பயனர்கள் தங்கள் அஞ்சல் குறியீட்டை வழங்கலாம். அஞ்சல் குறியீட்டை வழங்கியபோது, மதிப்பிடப்பட்ட விநியோகத்திற்கு 24 வணிக நாட்கள் ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பொருள் ஹானர் மேஜிக் புக் 15 சுமார் மூன்று வாரங்களில் மீண்டும் கையிருப்பில் இருக்குமா? அல்லது சாதனம் மீண்டும் கையிருப்புக்கு வந்ததும் வாங்குபவரை அடைய 24 நாட்கள் ஆகுமா? என்ற விஷயங்களை தெளிவுபடுத்துவதற்காக, வேறு சில அஞ்சல் குறியீடுகளை முயற்சிக்கும்போது, அதிலும் விநியோகத்திற்கு இதேபோன்ற 24 வணிக நாட்கள் ஆகும் காட்டப்பட்டது. எனவே, நமபிக்கையுடன் அடுத்த மூன்று வாரங்களுக்கு பிறகு இந்த லேப்டாப் வாங்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்!
0
0