Honor X20 5G அறிமுகம் | மீடியாடெக் டைமென்சிட்டி 900 சிப்செட், 120 Hz டிஸ்பிளே | விலை என்ன? இந்தியாவில் கிடைக்குமா?
Author: Hemalatha Ramkumar14 August 2021, 6:09 pm
ஹானர் நிறுவனம், ஹானர் X20 5G எனப்படும் புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த சாதனம் CNY 1,899 (தோராயமாக ரூ.21,760) விலையில் மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
இதன் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, கைபேசி 120 Hz LCD டிஸ்ப்ளே, மூன்று பின்புற கேமராக்கள், மீடியா டெக் டைமென்சிட்டி 900 சிப்செட் மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
HONOR X20 5G ஒரு மாத்திரை வடிவிலான பஞ்ச்-ஹோல் டிசைனில் ஒரு குறுகிய கீழ்புற பெசல் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. பின்புறத்தில், வட்ட வடிவிலான மூன்று கேமரா யூனிட் உள்ளது.
இந்த சாதனம் 6.67 அங்குல LCD திரையை முழு HD+ (1080×2376 பிக்சல்கள்) ரெசல்யூஷன் மற்றும் 120 Hz புதுப்பிப்பு வீதம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இது மிட்நைட் பிளாக், அரோரா ப்ளூ மற்றும் டைட்டானியம் சில்வர் வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.
HONOR X20 5G 64MP (f/1.9) முதன்மை ஸ்னாப்பர், 2MP (f/2.4) மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP (f/2.4) ஆழ சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா தொகுதி கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு, 16MP (f/2.0) முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.
ஹானர் X20 5 ஜி மீடியாடெக் டைமென்சிட்டி 900 சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
ஹூட்டின் கீழ், இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான மேஜிக் UI 4.2 இல் இயங்குகிறது மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,300 mAh பேட்டரியை பேக் செய்கிறது.
இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, சாதனம் டூயல்-பேன்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, GPS, ஹெட்போன் ஜேக் மற்றும் டைப்-c போர்ட் ஆகியவற்றுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது.
HONOR X20 5G போனின் 6GB/128GB அடிப்படை மாடலுக்கு CNY 1,899 (சுமார் ரூ. 21,760) விலையும் 8GB/256GB டாப்-எண்ட் மாடலுக்கு CNY 2,499 (தோராயமாக ரூ.28,600) விலையும் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சீன வலைத்தளம் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.
0
0