உங்கள் Vi போஸ்ட்பெய்ட் திட்டங்களில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி?

9 November 2020, 6:46 pm
How To Add Family Members To Your Vi Postpaid Plans
Quick Share

மூன்று தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களும் தங்கள் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கான கூடுதல் இணைப்பு உட்பட பல சேவைகளை வழங்குகின்றன. கூடுதல் இணைப்பு உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த இணைப்பிற்கு பணம் செலுத்தாமல் நீங்கள் இருக்கும் திட்டத்திலேயே சேர்க்க அனுமதிக்கிறது.

இதேபோல், Vi (வோடபோன்-ஐடியா) இந்த சலுகையுடன் மூன்று போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அவை ரூ.598, ரூ.749, மற்றும் ரூ.999 விலையிலான போஸ்ட்பெய்ட் திட்டங்கள் தான். இந்த போஸ்ட்பெய்ட் திட்டங்கள் இரண்டு, மூன்று மற்றும் ஐந்து கூடுதல் இணைப்புகளை வழங்குகின்றன. இருப்பினும், இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று புரியாத பயனர்களும் இருக்கின்றனர். எனவே, உங்கள் குடும்ப உறுப்பினர்களை உங்கள் போஸ்ட்பெய்ட் இணைப்பில் சேர்க்க அனுமதிக்கும் சில வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

 • படி 1: நீங்கள் முதலில் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் பக்கத்தை சரிபார்க்க வேண்டும்.
  • பின்னர், உங்கள் தொலைபேசி எண், இருப்பிடம் மற்றும் இணைப்பு விருப்பத்தை உள்ளிட வேண்டும்.
 • படி 2: அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, Next பொத்தானைத் தட்ட வேண்டும்.
  • பின்னர், நீங்கள் போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்வு செய்து Buy பொத்தானைத் தட்டவும்.
  • பின்னர், முதன்மை இணைப்புக்கும் பிற இணைப்புகளுக்கும் நீங்கள் எண்ணைத் தேர்வு செய்ய வேண்டும்.
 • படி 3: அதன் பிறகு, நீங்கள் ஒரு தேதியுடன் சிம் கார்டை வாங்க விரும்பும் முகவரியை உள்ளிட வேண்டும்.
 • படி 4: நீங்கள் குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டும் மற்றும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு, ஆன்லைன் கட்டணம் மற்றும் ஆன்லைன் வங்கி மூலம் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.
  • அது முடிந்ததும், உங்கள் சிம் கார்டு  குறிப்பிடப்பட்ட தேதியில் நீங்கள் கொடுத்த முகவரிக்கு டெலிவரி வழங்கப்படும்.

இந்த குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களின் மிக முக்கியமான பகுதி என்னவென்றால், தனி இணைப்புகளுக்கு நீங்கள் கூடுதல் தொகையை செலுத்த வேண்டியதில்லை. கூடுதலாக, இந்த திட்டங்கள் உள்ளடக்க நன்மைகளுடன் வருகின்றன, அதாவது அனைவருக்கும் உள்ளடக்க நன்மைக்கான அணுகல் கிடைக்கும். மொபைல் ஷீல்ட் காப்பீடு மற்றும் டேட்டா ரோல்ஓவர் வசதிகளும் இதில் அடங்கும்.

Views: - 19

0

0