உங்கள் +2 மதிப்பெண்ணை இந்த வலைத்தளத்தில் தெரிஞ்சிக்கோங்க!

Author: Dhivagar
29 June 2021, 1:25 pm
how to calculate 12th mark in 2021
Quick Share

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக  2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே இரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது. 

10, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களை 10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 50%, 11 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 20%, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் 30% என்கிற விகிதத்தில் கணக்கிட முடிவு செய்துள்ளது. 

இதன்படி கணக்கிட குழப்பம் உள்ளவர்கள் https://tn12marks.online/ என்ற இணையதளம் வாயிலாக தங்கள் மதிப்பெண்ணைக் கணக்கிட்டு தெரிந்துகொள்ளலாம்.

இந்த https://tn12marks.online/ இணையத்தளத்திற்குச் சென்று 10, 11 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வின் மதிப்பெண்களை உள்ளிட வேண்டும். உள்ளிட்டதும் உங்கள் 12 ஆம் வகுப்பு சான்றிதழில் எவ்வளவு மதிப்பெண் போடப்படும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

Views: - 437

1

0