ஆதார் கார்டுல இருக்க போட்டோ பிடிக்கலையா? எப்படி மாற்றனும் தெரியுமா?

15 April 2021, 8:54 am
How to Change Photo In Aadhaar Card Online
Quick Share

ஆதார் அட்டைதாரர்கள் தங்களது அருகிலுள்ள இ-சேவை மையத்தைப் பார்வையிட்டு தங்கள் புகைப்படத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. 

12 இலக்க தனித்துவமான அடையாள எண் வைத்திருப்பவர்களிடையே மிகவும் பொதுவான புகார்களில் ஒன்று என்றால் ஆதார் கார்டில் இருக்கும் போட்டோ பிடிக்கவில்லை என்பதுதான். 

UIDAI வழங்கிய தகவலின் படி, ஆதார் அட்டைதாரர்கள் தங்களது அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்திற்குச் சென்று ஆதார் பிரதிநிதியுடன் புகைப்பட மாற்றத்திற்கு கோரிக்கை வைக்க வேண்டும். 

ஆதார் சேர்க்கை மையத்தின் பிரதிநிதி உங்கள் புகைப்படத்தை மாற்ற ரூ.25 மற்றும் GST கட்டணத்தை வசூலிப்பார். ஆதார் அட்டைதாரர் புகைப்பட மாற்றக் கட்டணத்தை செலுத்தியவுடன், அங்குள்ள பிரதிநிதி புகைப்படத்தை மாற்றுவார். ஆதார் பிரதிநிதி ஆதார் அட்டைதாரருக்கு புதுப்பிப்பு கோரிக்கை எண் ( Update Request Number (URN)) உடன் ஒப்புதல் சீட்டு ஒன்றையும் வழங்குவார்.

ஆதார் புகைப்படத்தை ஆன்லைனில் மாற்றுவதற்கான வழிமுறைகள்:

 • www.uidai.gov.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிட்டு ஆதார் பதிவு படிவத்தைப் (Aadhaar enrollment form) பதிவிறக்க வேண்டும்.
 • ஆதார் சேர்க்கை படிவத்தை (Aadhaar enrollment form) பூர்த்திச் செய்து அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்தில் உள்ள ஆதார் பிரதிநிதியிடம் ஒப்படைக்க வேண்டும்.
 • ஆதார் சேர்க்கை மையத்தில், ஆதார் பிரதிநிதி உங்கள் பயோமெட்ரிக் தரவைப் பெறுவார், மேலும் உங்கள் புகைப்படத்தையும் எடுப்பார்.
 • உங்கள் ஆதார் அட்டை புகைப்படத்தைப் புதுப்பிக்க பிரதிநிதி ரூ.25 மற்றும் GST கட்டணத்தை வசூல்லிப்பார்.
 • பிரதிநிதியிடமிருந்து புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) உடன் ஒப்புதல் சீட்டையும் பெறுவீர்கள்.
 • உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் மாறிவிட்டதா என்பதைச் சரிபார்க்க நீங்கள் இப்போது URN கொண்டு சரிப்பார்க்கலாம், பின்னர் UIDAI போர்ட்டலில் இருந்து புதிய புகைப்படத்துடன் மேம்படுத்தப்பட்ட ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.

புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்குவதற்கான வழிமுறைகள்:

ஆதாரில் புகைப்படத்தை மாற்றுவதற்கான உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். புதிய ஆதார் அட்டையைப் பெற, கீழுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

 • https://uidai.gov.in/  ஐப் பார்வையிடவும், ‘My Aadhaar’ பகுதிக்குச் செல்லவும்.
 • இப்போது ‘Download Aadhaar’ என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் https://eaadhaar.uidai.gov.in/  என்ற பக்கத்திற்குத் திருப்பி விடப்படுவீர்கள்.
 • இப்போது உங்கள் ஆதார் அட்டையைப் பதிவிறக்க மூன்று விருப்பங்கள் கிடைக்கும், அதாவது ஆதார் எண், பதிவு ஐடி மற்றும் மெய்நிகர் ஐடி (Aadhaar Number, Enrolment ID and Virtual ID).
 • ‘Aadhaar Number’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
 • இப்போது ‘I Want a Masked Aadhaar?’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்து ‘Captcha Code’ ஐ உள்ளிடவும்.
 • இப்போது ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைக்கும்.
 • தேவையான இடத்தில் 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு, ‘Take a Quick Survey’ என்பதைக் கிளிக்  செய்ய வேண்டும். 
 • இப்போது இ-ஆதார் அட்டையைப் பதிவிறக்க, ‘Verify and Download’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவுதான்!

Views: - 86

0

0