PM கிசான் திட்டம்: 7 ஆம் தவணையாக ரூ.2000 உங்களுக்கு வந்துவிட்டதா? எப்படி தெரிந்துகொள்வது?
29 December 2020, 10:35 amPM கிசான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு மூன்று தவணையாக வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையின் போதும் ரூ.2000 வழங்கப்படும். கடைசியாக, இந்த டிசம்பர் 26 அன்று 7 ஆம் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது. நீங்களும் இந்த திட்டத்தின் பயனாளியாக இருந்து, பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிட்டதா இல்லையா என்று தெரியாமல் இருந்தால், அதை எப்படி சரிபார்ப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.
பொதுவாகவே, பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்தவுடன் உங்கள் பதிவுசெய்யப்பட்ட எண்ணிற்கு SMS வந்துவிடும். ஒரு வேளை SMS வருவதில் சிக்கல் என்ற நிலையில் இதை சரிபார்க்க முடியவில்லை என்றால், ஆன்லைன் மூலம் இந்த தகவலை சரிப்பார்கலாம். அதற்கு உங்களிடம் ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்.
- முதலில் நீங்கள் உங்கள் போனில் browser ஐத் திறக்க வேண்டும்.
- அதில் உள்ள Search Bar பகுதியில் PM Kisan Beneficiary Status என்று டைப் செய்ய வேண்டும்.
- கூகிளில் தோன்றும் Beneficiary Status என்னும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்
- அதை கிளிக் செய்ததும் PM கிசான் சம்மன் நிதி வெப் போர்டல் திறக்கப்படும்.
- அங்கு Aadhar Number, Account Number, Mobile Number என மூன்று விருப்பங்கள் இருக்கும்.
- அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து, எடுத்துக்காட்டாக மொபைல் எண்ணை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், உங்கள் மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுத்து Get Data என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் உங்களுக்கு அனைத்து தவணை விவரங்களும் காண்பிக்கப்படும்.
- அதன் மூலம் 7 ஆம் தவணை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதா இல்லையா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
0
0