உங்கள் வண்டியில் உள்ள டயரின் வயதைக் கண்டுபிடிப்பது எப்படி? எப்போது டயரை மாற்ற வேண்டும்? ஏன் மாற்ற வேண்டும்? How to Check the Age of a Tyre

Author: Dhivagar
30 July 2021, 1:42 pm
How to Check the Age of a Tyre
Quick Share

இன்றைய காலகட்டத்தில் எல்லோர் வீட்டிலும் குறைந்தது ஒரு இருசக்கர வாகனமாவது இருக்கிறது. என்னதான் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போனாலும், நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் சென்று வர ஒரு இருசக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ நம்மிடம் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சரிங்க, எல்லார்கிட்டயும் வண்டி இருக்கு ஓகே. ஆனால், இன்றைய தேதிக்கு பெட்ரோல் விற்கும் விலைக்கு மைலேஜ் என்பது மிகவும் முக்கியம். அதற்கு முக்கியமான வாகனங்களின் டயர் தரமானதாக இருக்க வேண்டும். அதே சமயம், மைலேஜ் என்பதற்கு மட்டுமல்லாமல், நினைத்து இடங்களுக்குச் சென்று நினைத்த நேரத்தில் திரும்ப வேண்டுமென்றால் டயர் பஞ்சர் ஆகாமல் தரமானதாக இருக்க வேண்டும்.

அதற்கு நீங்கள் டயரின் வயதை அறிந்துக்கொண்டு, வயதாகும்போது சரியான நேரத்தில் மாற்றிவிட வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் டயர்களின் வயதை எப்படி கண்டுபிடிப்பது என்பது தெரிவதில்லை. டயர்கள் வயதாகும்போது அதை மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டால் செயல்திறன் மோசமடையும், மேலும் சாலைகளில் செல்லும்போது பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படும்.

How to Check the Age of a Tyre

ஆன்டி-ஆக்ஸிஜனேற்ற இரசாயனங்கள் உடன் வாகனங்களுக்கான டயர்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரசாயனம் டயர்களின் வயதாகும் விகிதத்தை குறைக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள் ஆகும், ஆனால் டயர்கள் பயன்பாட்டில் இருக்கும்போது மட்டுமே இது வெளியிடப்படும். இருந்தாலும் தொடர் பயன்பாட்டில் இருக்கும்போது, அதன் தன்மை மாறக்கூடும்.

டயருக்கு வயதாவதைக் கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் டயர்கள் பொதுவாக வயதானதன் அறிகுறிகளைக் காண்பிக்கும் முன் தேய்ந்துவிடும். புற ஊதா கதிர்கள் மற்றும் மழை நீர் படுவதன் மூலம் டயர்கள் இயற்கையாகவே சிதையக்கூடும். குறிப்பாக உங்கள் டயர்கள் 4 முதல் 5 வயதுக்கு மேல் ஆனது என்றால் டயர்களின் பக்கச்சுவர்களில் விரிசல் மற்றும் தேய்மான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும். அடிக்கடி பஞ்சர் ஆகக்கூடும். நேரடியாக கண்களால் பார்க்கும்போது தேய்மானம் ஆனது கண்கூடாக தெரியக்கூடும்.

உங்கள் டயர்களின் வயதைக் கணக்கிட:

உங்கள் டயர்களின் வயதைக் கண்டறிய தேவையான அனைத்து தகவல்களுமே உங்கள் டயரிலேயே உள்ளது. அதில் ஒரு எண் குறியீடாக உங்கள் டயர்களின் வயது குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த உற்பத்தி குறியீட்டின் மூலம் உங்கள் கார் டயரின் வயதை தெரிந்துக்கொள்ள முடியும். உங்கள் வண்டி டயரின் பக்கங்களில் நான்கு இழக்க எண்கள் இருக்கும்.

How to Check the Age of a Tyre

எடுத்துக்காட்டாக 0619 என்ற எண் குறியீடு உங்கள் டயரில் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதில் முதல் இரண்டு இலக்கங்கள் உற்பத்தி செய்யப்பட்ட வருடத்தைக் குறிக்கும், அடுத்து இருக்கும் இரண்டு இலக்கங்கள் உற்பத்தி செய்யப்பட்ட வருடத்தைக் குறிக்கும். 

06 – என்பது உற்பத்தி செய்யப்பட்ட வாரம் 

19 – என்பது உற்பத்தி செய்யப்பட்ட வருடம்

இதன் மூலம் உங்கள் வாகனம் 2019 ஆம் ஆண்டின் ஆறாவது வாரத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

– 2000 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட டயர்கள் 4 இலக்க குறியீட்டைக் கொண்டிருக்கும்.

– 2000 க்கு முன் தயாரிக்கப்பட்ட டயர்கள் 3 இலக்க குறியீட்டை கொண்டிருக்கும். மூன்று இலக்க எண் குறியீடு இருந்தால் அதெல்லாம்  உடனடியாக மாற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

– உங்கள் டயர்களுக்கு 5 வயதுக்கு மேல் ஆகி இருந்தால், அவற்றை மாற்ற வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

எனவே, உங்களுக்கு பாதுகாப்பும் மைலேஜும் வேண்டுமென்றால், உங்கள் வண்டியின் டயர்களை அதன் ஆயுட்காலம் முடிந்தவுடன் மாற்றிவிட வேண்டும். பெரும்பாலான டயர் உற்பத்தியாளர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் டயர்களுக்கு 6 ஆண்டுகள் ஆயுட்கலாமாக நிர்ணயம் செய்கின்றனர். ஆனால் சில நிறுவனங்கள் 10 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றன. ஆனால், பொதுவாக டயர்களை 5 முதல் 6 வருடத்திற்கு ஒரு முறை மாற்றுவது உங்களுக்கு நல்ல மைலேஜ் மற்றும் பாதுகாப்பை வழங்க பயனுள்ளதாக இருக்கும்.

Views: - 216

0

0