உங்கள் ஸ்மார்ட்போனில் ஆட்டோ கரக்ட் ஆப்ஷனை அணைப்பது எப்படி…???

Author: Hemalatha Ramkumar
25 October 2021, 3:04 pm
Quick Share

ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள ஸ்டாக் கீபோர்டு அனுபவம், ஆட்டோ கரக்ட் அம்சத்துடன் வருகிறது. இது இயக்கப்பட்டால், நீங்கள் டைப் செய்வதைத் தானாகச் சரிபார்த்து சரியும் செய்கிறது.

இந்த அம்சம் சிலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், அது சில நேரங்களில் தடையாகவும் இருக்கலாம். ஆட்டோ கரக்ட் விருப்பம் இயக்கப்பட்டால், டைப் செய்வதை மிகவும் கடினமாக்கலாம். ஏனெனில் நீங்கள் குறிப்பிட விரும்பும் வார்த்தையை இது முற்றிலும் மாற்றிவிடும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்த அம்சத்தை டிசேபிள் நல்லது. ஏனெனில் இது நாம் டைப் செய்வதில் கூடுதல் கட்டுப்பாட்டை அளிக்கிறது. சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இந்த அம்சத்தை டிசேபிள் செய்யலாம்.

1. உங்கள் Android ஃபோன் அல்லது டேப்லெட்டில் உள்ள Settingsக்குச் செல்லவும்
2. “System” அல்லது “General Management” எனப்படும் மெனுவில் மறைந்திருக்கும் மொழிகள் மற்றும் உள்ளீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
3. வெர்சுவல் கீபோர்டு ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்
4. அடுத்து நீங்கள் இன்ஸ்டால் செய்த கீபோர்டுகளின் பட்டியலைக் காண முடியும். டிஃபால்ட் ஆண்ட்ராய்டு கீபோர்டாக இருக்கும் Gboard ஐ தட்டவும்.
5. நேட்டிவ் Android கீபோர்டுக்கான Settings மெனு இப்போது திறக்கும். அதில் Text Auto Correction ஆப்ஷனைத் தட்டவும்
6. Auto Correction க்கு அடுத்துள்ள டாகுலை ஸ்லைடு செய்யவும்.

Views: - 625

0

0