பேஸ்புக்ல ‘People You May Know’ அறிவிப்பு புடிக்கலையா? அதை இப்படி ஆஃப் பண்ணிடுங்க

Author: Dhivagar
29 March 2021, 2:40 pm
People You May Know
Quick Share

பேஸ்புக் என்பது உலகெங்கும் உள்ள பல மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைப்பின்னல் சேவையாகும். இதில் நீங்கள் உங்கள் நண்பர்கள் பகிர்ந்த உள்ளடக்கத்தையும், பேஸ்புக் பக்கங்களிலும் மற்றும் நீங்கள் பின்பற்ற விரும்பும் நபர்களிடம் இருந்தும் உள்ளடக்கங்களைப் பார்க்கலாம். 

நீங்கள் பின்பற்ற வேண்டிய பக்கங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் என்று முன்பின் தெரியாத பலவற்றை பேஸ்புக் உங்களுக்கு பரிந்துரையாக வழங்கும். மேலும்,  அந்த பரிந்துரைகள் சம்பந்தமான அறிவிப்புகளையும் (Notifications) அவ்வப்போது வெளியிடும்.

இந்த பரிந்துரைகளை ‘People You May Know’ பிரிவின் கீழ் நிறுவனம் காண்பிக்கும். இது நீங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றிய உங்கள் தொடர்பு பட்டியலின் ஒரு பகுதியாக பயனர்களை பட்டியலிடுகிறது அல்லது உங்கள் சுயவிவரத்தின் அடிப்படையிலும், நீங்கள் கொடுத்த தகவல் மற்றும் நீங்கள் ஏற்கனவே யாருடன் நண்பர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்குத் தெரிந்தவர்களாக கணித்து நிறுவனம் இந்த பரிந்துரைகளை வழங்குகிறது. 

இது பலருக்கும் உதவியாக இருக்கும் ஒரு அம்சம் தான். இருப்பினும், அனைத்து பயனர்களுக்குமே அதிக நண்பர்களைச் சேர்ப்பதற்கு விருப்பம் இருக்காது. அது போன்ற சூழல்களில் அவர்களுக்கு பேஸ்புக்கிலிருந்து கிடைக்கும் அந்த நினைவூட்டல்களும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்காது, குறிப்பாக சிறிய நண்பர் வட்டத்தையே வைத்திருக்க விரும்பும் ஒருவருக்கு இது ஒன்றை அறிவிப்புகள் தேவையில்லாதது. 

People You May Know

அதுபோன்ற சூழல்களில் நீங்கள் அறிவிப்புகளை முடக்க விரும்பினால், பின்வரும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் அதைச் செய்யலாம்:

People You May Know
  • படி 1: டெஸ்க்டாப்பில் பேஸ்புக் தளத்திற்குச் சென்று, திரையின் மேல் வலது மூலையில் உள்ள ஐகானிலிருந்து Settings and Privacy மெனுவுக்குச் செல்லவும்.
  • படி 2: இப்போது இந்த மெனுவிலிருந்து Settings என்பதை தேர்ந்தெடுக்கவும். இது ஒரு புதிய Settings பக்கத்தைத் திறக்கும்.
  • படி 3: பேஸ்புக் Settings பக்கத்தில் இடது பக்கப்பட்டியில் உள்ள மெனுவில் உள்ள Notifications ஐகானைக் கிளிக் செய்க.
  • படி 4: Notifications Settings பகுதியின் கீழ் People you may know என்ற அமைப்பைத் தேடுங்கள்.
  • படி 5: அங்கிருந்து, நீங்கள் அனைத்து விருப்பங்களையும் ஆஃப் செய்யலாம் அல்லது எஸ்எம்எஸ் வழியாக, மின்னஞ்சல் வழியாக அல்லது பயன்பாட்டில் உள்ள Push Notifications போன்ற அறிவிப்புகளை முடக்கலாம். இந்த Settings உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடியதாக காண்பிக்கப்படும் பேஸ்புக்கின் நபர்களுக்கான அறிவிப்புகளை ஓரளவு அல்லது முழுமையாக முடக்கும்.
People You May Know

Views: - 97

1

0