வாட்ஸ்அப்பில் உங்கள் சொந்த தீபாவளி ஸ்டிக்கர்களை உருவாக்கி அனுப்ப தெரிஞ்சுக்கலாம் வாங்க!

13 November 2020, 8:44 am
How To Download And Send Diwali 2020 WhatsApp Stickers
Quick Share

நாளை தீபாவளியைக் கொண்டாட நாடே தயாராகி வருகிறது. கொரோனா காரணமாகவோ, வேலைப்பளு காரணமாகவோ தொலைவில் உள்ள நம் அன்புக்குரியவர்களை நாம் சந்திக்க முடியவில்லை என்றாலும், எவ்வளவு ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் அவ்வளவு தூரத்தையும் நம் கைகளுள் அடங்கி விடுகிறது இந்த சமூக ஊடகங்களின் உதவியால். ஆமாங்க, எங்கிருந்தாலும் சிம்பிளாக மெசேஜ் செய்தோ அல்லது வீடியோ அழைப்பு மூலமோ நம் அன்பையும் தீபாவளி வாழ்த்துக்களையும் பகிர இந்த சமூக ஊடக தளங்கள் பெரிய பாலமாக இருக்கின்றன. 

இந்த தீபாவளியை முன்னிட்டு, வாட்ஸ்அப் தனது தளத்தில் பல அனிமேஷன் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

என்னதான், 2020 ஆம் ஆண்டை கொரோனா போன்ற பல சிக்கல்கள் புரட்டி போட்டாலும், எல்லாமே நல்லதாய் நடக்கும் என்ற எண்ணத்தை விதைக்க தீப ஒளி திருநாள் மலரவிருக்கிறது. இந்நாளை வாட்ஸ்அப் மூலம் ஸ்டிக்கர்களை அனுப்பி மெய்நிகர் தீபாவளியாக கொண்டாடலாம். 

இப்போதெல்லாம், வாட்ஸ்அப் அனிமேஷன் ஸ்டிக்கர்களின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது மற்றும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் வழியாக தீபாவளி ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து அனுப்புவது எப்படி என்பது படிப்படியாக இங்கே பார்க்கலாம்.

படி 1: முதலில் நீங்கள் வாட்ஸ்அப்பைத் திறந்து தீபாவளி ஸ்டிக்கர்களை அனுப்ப விரும்பும் நபரைத் தேட வேண்டும்.

படி 2: பின்னர் இமோஜி ஐகானைக் கிளிக் செய்து ‘+’ ஐகானைத் தேர்ந்தெடுக்கவும், நீங்கள் ஸ்டிக்கர்களின் வரிசையைக் காணலாம் மற்றும் அவற்றை அனுப்ப நீங்கள் ஸ்டிக்கர்கள் பேக்கை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

படி 3: உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கரை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை எனில், கீழே சென்று கெட் மோர் ஸ்டிக்கர்ஸ் Get More stickers என்ற விருப்பத்தைக் கிளிக் செய்க, இது ஸ்டிக்கர்களை நேரடியாக பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது.

படி 4: பின்னர் நீங்கள் வாட்ஸ்அப் வழியாக அனுப்ப ஸ்டிக்கர் பேக்கை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

உங்கள் சொந்த தீபாவளி ஸ்டிக்கரை எவ்வாறு தயாரிப்பது மற்றும் அனுப்புவது எப்படி?

தவிர, ஒருவர் தங்கள் சொந்த புகைப்படங்களுடன் தனிப்பயன் ஸ்டிக்கர்களையும் உருவாக்கலாம். அதற்காக, பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் ‘Sticker Make for WhatsApp’ மற்றும் ‘Sticker.ly’ போன்ற பல பயன்பாடுகள் உள்ளன. உங்கள் சொந்த தீபாவளி ஸ்டிக்கரை எவ்வாறு உருவாக்குவது என்பது இங்கே.

படி 1: பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஸ்டிக்கர் மேக்கர் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்யும்.

படி 2: பயன்பாட்டைத் திறந்து, ‘create new pack’ விருப்பத்தைக் கிளிக் செய்யுவும்.

படி 3: பின்னர் பேக்கிற்கு ஒரு பெயரைக் கொடுத்து, ‘Add stickers’ என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் புகைப்படத்துடன் ஸ்டிக்கரை உருவாக்கலாம். வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களைச் சேர்க்க நீங்கள் ஒரு பேக்கில் குறைந்தபட்சம் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

படி 4: இறுதியாக, நீங்கள் அதை வாட்ஸ்அப்பில் சேர்க்கலாம் மற்றும் அதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

Views: - 29

0

0