விடியலின் சூரியன்களுக்கு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் மூலம் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் சொல்வது எப்படி?
5 September 2020, 8:37 amQuick Share
இந்த ஆண்டு அனைத்து கொண்டாட்டங்களையும் போலவே, ஆசிரியர் தினமும் ஒரு ஆன்லைன் கொண்டாட்டமாகவே மாறிவிட்டது. செய்தியிடல் செயலிகளான வாட்ஸ்அப், பேஸ்புக், மெசஞ்சர் போன்றவற்றில் தான் வாழ்த்துக்களைப் பரிமாறி முடிகிறது. உங்கள் வாழ்வின் விடியலுக்குச் சூரியனாய் திகழ்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களைச் சொல்ல வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்பி மகிழுங்கள்.
ஆண்ட்ராய்டு போனில் ஆசிரியர் தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து பகிர்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க:
- வாட்ஸ்அப்பில் ஆசிரியர் தின ஸ்டிக்கர்களை அனுப்ப சில எளிய வழிமுறைகள் உள்ளன, அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- கூகிள் பிளே ஸ்டோரைத் திறந்து வாட்ஸ்அப்பிற்கான ஆசிரியர் தின ஸ்டிக்கர்களைத் தேடுங்கள். தனிப்பயனாக்கப்பட்ட செய்திகள், படங்கள் மற்றும் பலவற்றை அனுப்பும் பயன்பாடுகள் உட்பட பல விருப்பங்களுக்கான பக்கம் திறக்கப்படும்.
- உங்களுக்கு விருப்பமான பயன்பாட்டைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கவும். அடுத்து, புதிதாக பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாட்டிற்கு வாட்ஸ்அப் அணுகலை வழங்கவும். நீங்கள் வாட்ஸ்அப் செயலியிலும் அனுமதி கேட்கப்படும். அதற்கும் அனுமதி வழங்க வேண்டும்
- ஈமோஜிஸ் தாவலில் உள்ள ‘+’ ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் வாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர்கள் பேக்கைக் காண முடியும்.
- நீங்கள் இப்போது ஆசிரியர் தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உங்கள் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு அனுப்பலாம்.
iOS சாதனங்களில் ஆசிரியர் தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?
உங்கள் iOS சாதனத்திலிருந்து வாட்ஸ்அப்பில் ஆசிரியர் தின ஸ்டிக்கர்களை அனுப்பும் நடைமுறை சற்று வித்தியாசமானது.
- முதலாவதாக, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ஆசிரியர் தின ஸ்டிக்கர்கள் இல்லை. நீங்கள் சில ஸ்டிக்கர் பொதிகளைக் காண முடியும், ஆனால் அவை கொஞ்சம் ஸ்டிக்கர்களை மட்டுமே கொண்டிருக்கும்.
- எனவே, iOS பயனர்கள் ஆப் ஸ்டோரிலிருந்து ஸ்டிக்கர் மேக்கர் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆசிரியர் தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை நீங்களே உருவாக்கலாம்.
- இதன் மூலம், உங்கள் புகைப்படங்கள் பயன்பாட்டிலிருந்து படத்தை தேர்ந்தெடுக்கலாம், அதை ஸ்டிக்கராக மாற்றலாம்.
- அடுத்து, புதிய ஸ்டிக்கரைப் பயன்படுத்த நீங்கள் வாட்ஸ்அப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும்.
- முடிந்ததும், தனிப்பயனாக்கப்பட்ட ஆசிரியர் தின ஸ்டிக்கர்களை உங்கள் ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
- மாற்றாக, உங்கள் Android சாதனத்திலிருந்து சில ஆசிரியர் தின ஸ்டிக்கர்களை உங்கள் iOS சாதனத்திற்கு அனுப்பி, அதை உங்கள் ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Views: - 0
0
0