கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை டவுன்லோடு செய்வது எப்படி?

12 May 2021, 12:34 pm
How To Download Your Covid-19 Vaccine Certificate On Aarogya Setu App
Quick Share

இந்தியாவில் கோவிட்-19 தொற்று பரவாமலிருக்க மூன்றாம் கட்டமாக தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில், CoWIN ஆப் அல்லது வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்து 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம். 

ஆனால், இந்திய மக்கள் பலரும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவரும் இந்த வேளையில் இந்த தடுப்பூசிக்கான முன்பதிவு அவசர நேரத்தில் IRCTC தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை போல் மிகவும் கடினமாகிவிட்டது. ஒருவேளை நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலோ அல்லது இந்த மாதத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள போகிறீர்கள் என்றாலோ தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் அதற்கான சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டு வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன – முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு ஒரு தற்காலிக சான்றிதழும் மற்றும் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டதும் இரண்டாவது சான்றிதழும் வழங்கப்படும்.

முதல் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான தற்காலிக சான்றிதழை பதிவிறக்கும் வழிமுறைகள்.

  • முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதும் இந்த டிஜிட்டல் சான்றிதழைப் பதிவிறக்குவதற்கு, உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் ஒரு மெசேஜ் வரும்.
  • அந்த மெசேஜ் உடன் ஒரு URL இருக்கும். 
  • அந்த இணைப்பைக் கிளிக் செய்தால், உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்கும்படி கேட்கப்படும். 
  • உங்கள் எண்ணை உள்ளிட்ட பிறகு, Proceed எனும் விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 
  • அடுத்து Download பட்டனைக் காண்பீர்கள், இப்போது உங்கள் சான்றிதழைப் பெற கிளிக் செய்யலாம்.

இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:

  • ஆரோக்கிய சேது பயன்பாட்டின் மூலமும் நீங்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைப் பெறலாம். இதற்கு முதலில், நீங்கள் ஆரோக்கிய சேது பயன்பாட்டை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டும்.
  • அடுத்து, பயன்பாட்டைத் திறந்து, ‘CoWIN’ தாவலுக்குச் செல்லவும். 
  • இங்கு வந்ததும், தடுப்பூசி சான்றிதழ் (Vaccination Certificate) விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள். இப்போது உங்கள் பயனாளி குறிப்பு ஐடியை (beneficiary reference ID) உள்ளிடுமாறு கேட்கும். தடுப்பூசிக்கு பதிவு செய்யும் போது வழங்கப்பட்ட ID தான் beneficiary reference ID என்பதாகும்.
  • நீங்கள் இதைச் செய்த பிறகு, ‘Get Certificate’ எனும் பொத்தானைத் கிளிக் செய்து சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

Views: - 433

2

1