உங்கள் ஒன்பிளஸ் போனில் பிட்மோஜி AOD யை இயக்குவது எப்படி…???

Author: Hemalatha Ramkumar
4 October 2021, 2:09 pm
Quick Share

பிட்மோஜி AOD (Bitmoji AOD), அல்லது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே (Always On Display) என்பது ஆக்ஸிஜன்OS 11 உடன் ஒன்பிளஸ் சாதனங்கள் பெறும் பல புதிய அம்சங்களில் ஒன்றாகும். ஒன்பிளஸ் 9 சீரிஸ் சாதனங்களுக்கு மட்டுமே முதலில் இந்த அம்சம் கிடைத்தது என்றாலும், சமீபத்திய புதுப்பிப்புகள் ஒன்பிளஸ் நோர்ட் போன்ற பழைய தொலைபேசிகளுக்கும் இந்த அம்சத்தைக் கொண்டு வந்துள்ளன.

பிட்மோஜி AOD பெர்ஸ்னலைஸ்டு ஆம்பியண்ட் டிஸ்ப்ளே ஸ்கிரீனை கொண்டு வருகிறது. அங்கு உங்கள் பிட்மோஜி கேரக்டரை டிஸ்ப்ளேவின் மேல் காணலாம். பொதுவாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை இது பிரதிபலிக்கிறது. உதாரணமாக, உங்களிடம் மியூசிக் ப்ளேயிங் இருந்தால், உங்கள் பிட்மோஜி அவதார் ஒரு ஜோடி ஹெட்ஃபோன்களுடன் சத்தமிடுவது போல நீங்கள் காண்பீர்கள் அல்லது இரவு நேரமாகி விட்டால், உங்கள் அவதார் படுக்கையில் தூங்குவது போல இருக்கும்.

உங்கள் தொலைபேசி இந்த அம்சத்திற்கு தகுதியுடையது மற்றும் அதற்காக ஆக்ஸிஜன்OS -ன் சரியான பதிப்பை நீங்கள் மேம்படுத்தியிருந்தால், உங்கள் ஒன்பிளஸ் தொலைபேசியில் பிட்மோஜி AODயை எப்படி எளிதாக அமைக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

படி 1: பிட்மோஜி செயலியைப் பதிவிறக்கவும்.
இந்த அம்சம் வேலை செய்ய பிட்மோஜி செயலி அவசியம். உங்களிடம் ஏற்கனவே இந்த செயலி இல்லையென்றால் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்யலாம்.

படி 2: பிட்மோஜியில் உங்கள் அவதாரத்தை உருவாக்கவும்.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்ட உங்கள் சொந்த தன்மையைத் தனிப்பயனாக்க பிட்மோஜி உங்களை அனுமதிக்கிறது. உங்கள் ஹேர் ஸ்டைல், முக அம்சங்கள் மற்றும் ஆடை பொருந்த உங்கள் கதாபாத்திரத்தை அமைத்து, தோற்றத்தில் திருப்தி அடையும் போது உங்கள் அவதாரத்தை சேவ் செய்யவும்.

படி 3: கஸ்டமைசேஷனிற்குச் செல்லுங்கள்.
பிட்மோஜி செயலியிலிருந்து வெளியேறி உங்கள் தொலைபேசியின் செட்டிங்ஸிற்குச் செல்லவும். இங்கே, Settings/ Customisation/ Clock on ambient display ஆகியவற்றை தேர்வு செய்யவும். பல்வேறு கடிகாரங்களுக்கிடையே பிட்மோஜி விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் ஏற்கனவே நிறுவிய பிட்மோஜி செயலி மூலம் உங்கள் தொலைபேசியை உங்கள் பிட்மோஜி அவதாரத்துடன் இணைப்பதன் மூலம் பின்பற்றவும்.
அவ்வளவுதான்! உங்கள் பிட்மோஜி அவதார் இப்போது உங்கள் ஆம்பியண்ட் ஸ்கிரீனில் உள்ளது.

உங்கள் பிட்மோஜியை எப்போதும் ஆனில் வைப்பது எப்படி?
செட்டிங்ஸில் OnePlus Bitmoji AODTurn on எப்போதும் ஆம்பியண்ட் டிஸ்ப்ளேவை ஆனில் வைக்க உதவும்.

Views: - 483

0

0