கூகிள் தேடலில் பயன்படுத்துவதற்கு ஏற்ற இலவச படங்களை கண்டுபிடிப்பது எப்படி?

5 September 2020, 8:43 pm
How to find free images that you can use on Google Search
Quick Share

கூகிளில் நீங்கள் படங்களைத் தேடும்போது, தோன்றும் அனைத்து படங்களும் பயன்படுத்த இலவசம் என்று அர்த்தமல்ல என்று ​​உங்களுக்குத் தெரியாவிட்டால் தெரிந்துக்கொள்ளுங்கள். உரிமையாளருக்கு கிரெடிட்டைக் கொடுப்பதன் மூலம் சில படங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம், மற்றவற்றை வாங்காமல் சிலவற்றைப் பயன்படுத்தினால், நீங்கள் மிகவும் விலையுயர்ந்த பதிப்புரிமைச் சட்டங்களை (copyright laws) மீறுவதாக அர்த்தமாகும். 

ஸ்டாக் போட்டோஸ் நம்மில் பெரும்பாலான உள்ளடக்க படைப்பாளர்களுக்கான (Content Creators) ஆதாரமாக இருக்கும்போது, பெரும்பாலும் சட்டரீதியான சிக்கல்கள் இல்லாமல் ​​சரியான படத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சிக்கலாக இருக்கும்.

இருப்பினும், கூகிளின் புதிய புதுப்பிக்கப்பட்ட படத் தேடல் முறைக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். ஆம், இதன் மூலம் பயன்படுத்த இலவசமாக உள்ள படங்களை கண்டுபிடிப்பது எளிது. பயன்பாட்டிற்கு இலவசமில்லாத படங்களையும் கண்டுபிடிக்கலாம், ஆனால் நீங்கள் உரிமம் பெற்று அவற்றைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் அதை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்:

கூகிள் தேடலில் நீங்கள் வழக்கம்போல விரும்பும் படத்தைத் தேடுங்கள். முடிவுகள் காண்பித்ததும், தேடல் பட்டியின் கீழ் உள்ள விருப்பங்களிலிருந்து படங்கள் (Images) என்பதைக் கிளிக் செய்க.

– Filter மெனுவைப் பெற ‘Tools’ என்பதைக் கிளிக் செய்க.

– இப்போது, ​​‘பயன்பாட்டு உரிமைகள்’ (Usage Rights) என்பதைக் கிளிக் செய்க, அவற்றின் உரிமத்தின் மூலம் படங்களை வரிசைப்படுத்துவதற்கான விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள் – கிரியேட்டிவ் காமன்ஸ் (Creative Commons) அல்லது வணிக பயன்பாடு (commercial use).

உரிமம் பெற்ற படத்திற்கான உரிமையை அதன் விளக்கத்திலிருந்து நேரடியாக எவ்வாறு பெறுவது என்பதையும் கூகிள் இப்போது உங்களுக்குக் கூறுகிறது.

இப்போது, ​​நீங்கள் பயன்பாட்டு உரிமைகள் விருப்பங்களில் எதையும் கிளிக் செய்யாவிட்டால், உங்கள் தேடல் அளவுகோல்களுக்கு பொருந்தக்கூடிய அனைத்து படங்களையும் Google காண்பிக்கும். உரிமத் தரவு இல்லாத அனைத்து படங்களும் “images may be subject to copyright” “படங்கள் பதிப்புரிமைக்கு உட்பட்டிருக்கலாம்’ என்று எச்சரிக்கையுடன் பெயரிடப்படும்.

ஒரு படைப்பாளி அல்லது ஒரு வெளியீட்டாளர் ஏற்கனவே இந்த தகவலை வழங்கியிருந்தால் மட்டுமே கூகிள் படங்களுக்கான உரிம விவரங்களை வழங்குகிறது, எனவே பதிப்புரிமை பெற்ற படத்தை அறியாமல் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, இந்த தகவல் இல்லாத புகைப்படங்களை வடிகட்டுவது மட்டுமே ஆகும்.

கூகிளில் சரியான படத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், Pixabay போன்ற பதிப்புரிமை இல்லாத ஸ்டாக் புகைப்பட தளங்கள் மூலம் எப்போதும் ஸ்கேன் செய்யலாம். கூகிள் தேடல் போன்ற முழுமையான விருப்பங்கள் அதில் நிச்சயமாக இல்லை, ஆனால் அவற்றில் சில சுவாரஸ்யமான விருப்பங்கள் உள்ளன மற்றும் புகைப்படத் தரம் சிறப்பாக இருக்கும்.

Views: - 0

0

0