வாட்ஸ்அப் மூலம் அருகிலுள்ள கோவிட்-19 தடுப்பூசி மையங்களை கண்டுபிடிப்பது எப்படி?

3 May 2021, 1:08 pm
How To Find Nearest COVID-19 Vaccination Centers Via WhatsApp
Quick Share

இந்தியாவில் COVID-19 தொற்று கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், அரசாங்கம் முன்பை விட அதிக அளவில் தடுப்பூசியை மக்களுக்கு வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

ஏற்கனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் 2021 மே 1 முதல் வழங்கப்படுகிறது. கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு இரண்டும் இப்போது மக்களுக்கு கிடைக்கிறது.

இதையடுத்து தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்வதற்கான பல வழிகளையும் அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது, CoWIN ஆப் அல்லது வலைத்தளம், ஆரோக்கிய சேது ஆப் மற்றும் UMAANG ஆப் வழியாக COVID-19 தடுப்பூசிகளை முன்கூட்டியே பதிவு செய்ய முடியும். 

முன்னதாக கூகிள் மேப்ஸ் வழியாக அருகிலுள்ள தடுப்பூசி மையங்களை கண்டுபிடிப்பதற்கான வசதி கிடைத்தது. அதையடுத்து, இப்போது வாட்ஸ்அப் வழியாகவும் தடுப்பூசி மையங்களை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் வழியாக அருகிலுள்ள தடுப்பூசி மையங்களைக் கண்டறிய அரசாங்கம் வழிவகைகளைச் செய்துள்ளது.

இப்போது, ​​வாட்ஸ்அப் வழியாக அருகிலுள்ள தடுப்பூசி மையங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைப் பார்ப்போம்.

வாட்ஸ்அப் வழியாக அருகிலுள்ள தடுப்பூசி மையங்களை கண்டுபிடிக்க, 

வாட்ஸ்அப்பில் உள்ள MyGov Corona Help Desk ஐத் தொடர்புகொள்வதன் மூலம் அருகிலுள்ள தடுப்பூசி மையங்களை நீங்களே கண்டுபிடிக்கலாம். நீங்கள் ‘Namaste’ என்று டைப் செய்து Chatbot உடன் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப்பில் 9013151515 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். இது ஒரு தானியங்கி பதிலை உருவாக்கும் மற்றும் உங்கள் pincode ஐ வழங்குவதன் மூலம் COVID-19 தடுப்பூசியை வழங்கும் அருகிலுள்ள மையங்களைக் கண்டறிய முடியும்.

COVID-19 தடுப்பூசி மையங்களின் பட்டியலைத் தவிர, Chatbot லிருந்து CoWIN இணையதளத்தில் தடுப்பூசி பதிவு செயல்முறைக்கும் ஒரு இணைப்பு இருக்கும். குறிப்பிடத்தக்க வகையில், வாட்ஸ்அப்பில் உள்ள MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்கின் Chatbot ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளை மட்டுமே ஆதரிக்கிறது. 

Views: - 101

0

0

Leave a Reply