உங்கள் EPF அக்கவுண்ட்டுக்கான UAN நம்பர் மிஸ் பண்ணிட்டீங்களா? அட கவலைய விடுங்க! சிம்பிள் டிப்ஸ் இதோ

Author: Hemalatha Ramkumar
7 August 2021, 6:03 pm
how to know uan number by employer
Quick Share

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பல வழிகளில் EPF இருப்பை சரிபார்க்க உதவுகிறது. ஆன்லைன், மிஸ்டு கால், எஸ்எம்எஸ், UMAANG ஆப் என பல வழிகள் உண்டு. ஆனால் உங்களிடம் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனும் UAN நம்பர் இல்லையென்றால் என்ன செய்வது? அதை மறந்துவிட்டீர்களா? கவலைப்பட தேவையில்லை, இப்போது UAN இல்லாமல் உங்கள் EPF இருப்பை சரிபார்க்க முடியும்.

ஆன்லைனில், மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற வழிகளில் உங்கள் EPF இருப்பை UAN இல்லாமல் கண்காணிக்க முடியும். ஆனால் அதற்கு, நீங்கள் UAN போர்ட்டலில் முதலில் பதிவு செய்திருக்க வேண்டும், மேலும் உங்கள் KYC ஆவணங்களை உங்கள் EPF கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். EPFO போர்ட்டலில் Login செய்த பிறகு, ஒரு நபர் UAN ஐப் பயன்படுத்தாமல் தனது EPF இருப்பை சரிபார்க்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

UAN இல்லாமல் EPF இருப்பை சரிபார்க்கும் வழிமுறைகள்:

  • https://epfindia.gov.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.
  • ‘Know your EPF Balance” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  • இப்போது நீங்கள் epfoservices.in.epfo எனும் வலைப்பக்கத்தில் “Member Balance Information” என்ற பிரிவுக்குச் செல்ல வேண்டும்.
  • இப்போது உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து EPF அலுவலகம், ஸ்தாபனக் குறியீடு, PF கணக்கு எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும்.
  • இப்போது ‘I agree’ விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • உங்கள் EPF கணக்கு இருப்பு இப்போது உங்கள் சாதனத் திரையில் காண்பிக்கப்படும்.

மிஸ்டு கால் மற்றும் SMS வழியாக UAN இல்லாமல் EPF இருப்பை சரிபார்க்க:

எஸ்எம்எஸ் மூலம் உங்கள் PF இருப்பை சரிபார்க்க ‘EPFOHO UAN’ என டைப் செய்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

மிஸ்டு கால் மூலம் உங்கள் PF இருப்புநிலையைச் சரிபார்க்க உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

Views: - 621

0

0