வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியவருக்கே தெரியாமல் ரகசியமாக படிப்பது எப்படி தெரியுமா? | Whatsapp Trick

Author: Hemalatha Ramkumar
14 August 2021, 4:39 pm
How to read a message on whatsapp secretly
Quick Share

பொதுவாக உங்களுக்கு ஒருவர் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்கிறார், மெசேஜ் அனுப்பப்பட்டதும் ஒரு டிக் காண்பிக்கும். உங்களுக்கு வந்து சேர்ந்துவிட்டால் இரண்டு டிக் காண்பிக்கும். அடுத்து அதை நீங்கள் திறந்து படித்துவிட்டால், ப்ளூ டிக் காண்பிக்கும். 

ஆனால், அனுப்பியவருக்கு ப்ளூ டிக் காண்பிக்காமல் அந்த மெசேஜை நீங்கள் ரகசியமாக படிக்க வேண்டும் என ஆசைப்பட்டதுண்டா? அப்படி நீங்கள் ஆசைப்பட்டால் அதற்கும் வாட்ஸ்அப்பிலேயே ஒரு வழி உண்டு.

அது எப்படி என நீங்கள் யோசித்தால், உங்கள்  யோசனைக்கு பதில் தான் இந்த பதவு.

அனுப்புநருக்கு ப்ளூ டிக் காண்பிக்காமல் பயனர்கள் வாட்ஸ்அப் குறுஞ்செய்தியைப் படிக்க உதவும் ஒரு சுவாரஸ்யமான வாட்ஸ்அப் ட்ரிக் ஒன்று உள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இருவருக்குமே கிடைக்கிறது. 

  • உங்கள் வாட்ஸ்அப்பை திறக்க வேண்டும்.
  • வலது பக்கத்தில் உள்ள More options மெனுவை குறிக்கும் மூன்று புள்ளி ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • Settings என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்து Account என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இப்போது Privacy ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால் Read Receipt ஆப்ஷனைப் பார்ப்பீர்கள்.
  • இப்போது Read Receipt ஆப்ஷனை ஆஃப் செய்வதற்கான ஐகானை Toggle செய்யவும்.

அவ்வளவு தான்!

இப்போது, உங்களுக்கு யார் மெசேஜ் அனுப்பினாலும், அதை நீங்கள் ரகசியமாக படிக்கலாம். ஆனால், நீங்கள் படித்தீர்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.

ரகசியமாக படிக்க வேண்டியதற்கான தேவை இல்லையென்றால், இதே வழிமுறையைப் பின்பற்றி நீங்கள் Read Receipt ஆப்ஷனை ஆன் செய்துகொள்ளலாம்.

Views: - 1279

1

0