உங்கள் ஆன்ட்ராய்டு போனில் டெலிட் ஆன வாட்ஸ்அப் மெசேஜ்களை மீட்டெடுப்பது எப்படி?

1 September 2020, 9:14 am
How to backup your WhatsApp chats and data on an iPhone or Android device
Quick Share

உங்கள் Android போனில் டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை திரும்பவும் மீட்டெடுக்க 2 வழிகள் இருக்குங்க. அதை எப்படினு தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

முதலில், உங்கள் வாட்ஸ்அப் டேட்டாக்களை காப்புப் பிரதி அதாவது backup எடுத்து வைக்கவேண்டியது மிகவும் அவசியமான பணிகளில் ஒன்று. இதற்கு நீங்கள் தாமதம் செய்தால், மெசேஜ்கள் அல்லது மீடியாக்கள் தற்செயலாக டெலிட் ஆகிவிட்டால் மீட்டெடுப்பது கஷ்டம் தான். 

ஒரு வேளை நீங்கள் பேக்அப் எடுத்துவைத்திருந்தால் நீக்கப்பட்ட அந்த செய்திகளை Google Drive மற்றும் உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி விரைவாகவும் எளிதாகவும் மீட்டெடுக்கலாம். உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இணைக்கப்பட்ட அதே தொலைபேசி எண் மற்றும் கூகிள் கணக்கை நீங்கள் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் இந்த செயல்முறை செயல்படாது.

உங்கள் வாட்ஸ்அப் செய்திகளை Google Drive இல் பேக்அப் எடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள அடுத்து வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்:

1. வாட்ஸ்அப்பைத் திறந்து திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி More Options ஐகானைப் பிரெஸ் செய்யுங்கள்.

2. “Settings” என்பதைப் பிரெஸ் செய்யவும், பின்னர் “Chats” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

How to backup your WhatsApp chats and data on an iPhone or Android device

3. “Chat Backup” என்பதைப் பிரெஸ் செய்யவும்.

How to backup your WhatsApp chats and data on an iPhone or Android device

4. “Backup to Google Drive” என்பதைத் தேர்ந்தெடுத்து “Never” என்பதைத் தவிர வேறு ஏதேனும் ஒரு ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

How to backup your WhatsApp chats and data on an iPhone or Android device

5. உங்கள் வாட்ஸ்அப் காப்புப்பிரதிகளுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் Google கணக்கைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது “Add Account” என்பதைப் பிரெஸ் செய்து புதிய கூகிள் கணக்கை இணைக்கவும்.

6. “Backup” என்பதைப் பிரெஸ் செய்து, தேவைப்பட்டால், காப்புப்பிரதிகளுக்குப் பயன்படுத்த நெட்வொர்க்கைத் தேர்வுசெய்க.

சரி, நீங்கள் பேக்அப் எடுத்துவைத்த மெசேஜ்களை உங்கள் Android சாதனத்தில் உங்கள் Google Drive லிருந்து மீட்டெடுப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

1. உங்கள் Android சாதனத்திலிருந்து வாட்ஸ்அப்பை Uninstall செய்துவிடுங்கள்.

How to backup your WhatsApp chats and data on an iPhone or Android device

2. கூகிள் பிளே ஸ்டோரைத் திறந்து வாட்ஸ்அப்பை மீண்டும் Install செய்யுங்கள்.

3. வாட்ஸ்அப்பைத் திறந்து உங்கள் தொலைபேசி எண்ணைச் சரிபார்க்கவும்.

4. உங்கள் Google Drive யிலிருந்து உங்கள் அரட்டைகளை “மீட்டமைக்க” அதாவது Recover செய்ய உங்களிடம் கேட்கப்படும். அப்போது “Recover” என்பதைப் பிரெஸ் செய்தால் போதும்.

5. உங்கள் அனைத்து மெசேஜ்கள் மற்றும் மீடியாக்களும் Recover செய்து முடிந்ததும் “Next” என்பதை பிரெஸ் செய்யவும். 

அவ்வளவுதான், உங்கள் மெசேஜ்களும் மீடியாக்களும் டெலிட் ஆனாலும்  இதுபோல பேக்அப் எடுத்து வைத்து Recover செய்து கொள்ளுங்கள். 

இது போன்று உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் கமெண்டில் பதிவுச்  செய்யுங்கள்.  

Views: - 0

0

0