ட்விட்டரில் ஒரு ஃபாலோவரை பிளாக் செய்யாமல் நீக்குவது எப்படி…???

Author: Hemalatha Ramkumar
12 October 2021, 6:18 pm
Quick Share

ட்விட்டர் வெப் பதிப்பிற்கான புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. பயனர்கள் இப்போது ஒரு ஃபாலோவரை பிளாக் செய்யாமலே ரிமூவ் செய்யலாம். நிறுவனம் இந்த செயலை “சாஃப்ட் பிளாக்” என்று அழைக்கிறது.

தற்போது, ​​ட்விட்டரின் மொபைல் பதிப்பில் இந்த வசதி இல்லை. ஆனால், நீங்கள் வெப் வெர்ஷனில் உள்நுழைந்து, அங்கிருந்து ஃபாலோவர்களை அகற்றலாம். சாஃப்ட் பிளாக் அம்சம் முற்றிலும் பிளாக் செய்வதில் இருந்து வேறுபட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் வழக்கில், மற்றவர் இன்னும் உங்கள் ட்வீட்களையும் செய்திகளையும் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் ஒரு ஃபாலோவரை நீக்கியவுடன், அந்த நபர் உங்கள் ட்வீட்களை உங்கள் ஃபீடில் பார்க்க முடியாது.

நீங்கள் ஒரு ஃபாலோவரை சாஃப்ட் பிளாக் அல்லது ரிமூவ் செய்த பின், தனிநபருக்கு மாற்றம் குறித்து அறிவிக்கப்படாது. ஆனால் அதே நபர் மீண்டும் உங்களைப் ஃபாலோ செய்வதற்கான விருப்பத்தைப் பெறுவார். எனவே, நீங்கள் யாரும் உங்களை ஃபாலோ செய்வதை விரும்பவில்லை என்றால், அந்த IDயை நீங்கள் பிளாக் செய்யலாம்.

ட்விட்டர் ஏற்கனவே இந்த அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. எனவே உங்களுக்கு இது ஏற்கனவே இல்லையென்றால் இன்னும் சில நாட்களில் நீங்கள் அதை பெறுவீர்கள்.

ட்விட்டரில் ஃபாலோவர்களை பிளாக் செய்யாமல் ரிமூவ் செய்வது?
ஒரு ஃபாலோவரை ரிமூவ் செய்ய, நீங்கள் ட்விட்டரில் உங்கள் ப்ரொபைலுக்கு செல்ல வேண்டும்.

#இப்போது, ​​”ஃபாலோவர்கள்” என்பதைக் கிளிக் செய்து, பின்னர் மூன்று-புள்ளி ஐகானை அழுத்தவும்.

#“ரிமூவ் ஃபாலோவர்” என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Views: - 180

0

0

Leave a Reply