உங்கள் விண்டோஸ் 11 PCயில் மால்வேர் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்…???

Author: Hemalatha Ramkumar
10 October 2021, 12:02 pm
Quick Share

விண்டோஸ் என்பது உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் PC ஆபரேட்டிங் சிஸ்டம். மைக்ரோசாப்ட் சமீபத்தில் தனது சமீபத்திய விண்டோஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டது. இது சில மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுவருகிறது.

உங்கள் விண்டோஸ் PC மால்வேரால் பாதிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அல்லது நீங்கள் வழக்கமான ஸ்கேன் செய்ய விரும்பினால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அதைச் செய்யலாம். மைக்ரோசாப்டின் சமீபத்திய விண்டோஸ் 11 சாஃப்ட்வேர் ஒரு உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது; விண்டோஸ் செக்யூரிட்டி. விண்டோஸ் 11 PCயை விரைவாக ஸ்கேன் செய்ய ஒருவர் இதைப் பயன்படுத்தலாம். இது மால்வேர்களைக் கண்டறிந்து அதை அகற்ற உதவும்.

ஸ்டார்ட் மெனுவில் ‘Windows Defender’ எனத் தேடினால், Windows Security விருப்பத்தைக் காணலாம். நீங்கள் சர்ச் பாக்ஸை டிசேபிள் செய்திருந்தால், டாஸ்க் பாரில் வலது கிளிக் செய்வதன் மூலம் அதை நீங்கள் மீண்டும் இயக்கலாம். நீங்கள் Search> Box/Icon யை கிளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் சர்ச் பாக்ஸை எனேபிள் செய்ய விரும்பவில்லை என்றால், விருப்பத்தை அணுக மற்றொரு முறையை முயற்சி செய்யலாம். இதற்காக, நீங்கள் “Settings” பிரிவுக்குச் சென்று, பின்னர் “Privacy & Security” மற்றும் “Windows Security” க்குச் செல்லலாம். சாஃப்ட்வேரைத் திறக்க “Open Windows Security” விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்யலாம். மேலும் அறிய படிக்கவும்.

மால்வேர் கண்டுபிடிக்க விண்டோஸ் 11 PCயை ஸ்கேன் செய்வது எப்படி?
1. ‘Windows Security’ கருவியைத் திறக்கவும்.
2. ‘Virus & Security Protection’ விருப்பத்தைப் பார்வையிடவும்.
3. ‘Quick Scan’ விருப்பத்தை சொடுக்கவும்.

Views: - 482

0

0