வோடபோனில் வேண்டாத நேரத்தில் தொல்லை செய்யும் கஸ்டமர் கேர் அழைப்புகளை தவிர்ப்பது எப்படி?

2 February 2021, 9:10 am
How To Stop Customer Care Calls In Vodafone
Quick Share

ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளைத் தடுக்க TRAI பல விதிமுறைகளை வெளியிட்டுள்ள போதிலும், மக்கள் இன்னும் சிக்கல்களை எதிர்கொண்டு தான் இருக்கின்றனர். அனைத்து தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களும் டெலிமார்க்கெட்டர்களிடமிருந்து ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுக்க பல முயற்சிகளை எடுத்தும் வருகின்றனர். இதற்காக DoNot Disturb என்ற வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்; இருப்பினும், அந்த சேவைகளைப் பெற நீங்கள் முதலில் உங்களை எண்ணைப் பதிவுச் செய்ய வேண்டும்.

டெலிமார்க்கெட்டர்களிடமிருந்து வரும் அனைத்து ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளை நிறுத்த DND சேவைகள் உங்களை அனுமதிக்கின்றன. ஆனால், இந்த சேவைகளைப் பெறுவதற்கு பயனர்கள் சில முக்கியமான  வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், ஏனெனில் அனைத்து ஆபரேட்டர்களுக்கும் வெவ்வேறு வழிமுறைகள் உள்ளன. அவ்வாறான நிலையில், Vi (வோடபோன்-ஐடியா) இல் DND சேவைகளைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கும் அனைத்து வழிமுறைகளையும் இப்போது பார்க்கலாம்.

  • முதலில், நிறுவனத்தின் வலைத்தளமான https://www.myvi.in/dnd ஐ நீங்கள் பார்வையிட வேண்டும். 
  • உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து விட்டு Send OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 
  • உங்கள் எண்ணுக்கு வந்த OTP ஐ உள்ளிட வேண்டும் மற்றும் Verify விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். 
  • கூடுதலாக, நிறுவனம் DND வரலாற்றை சரிபார்க்கவும் உங்களை அனுமதிக்கிறது.
  • மேலும் அந்த சேவைகளைப் பெற, பயனர்கள் https://pref.vilpower.in/vodafone/ ஐ சரிபார்த்து, OTP எண்ணுடன் தங்கள் மொபைல் எண்ணையும் உள்ளிட வேண்டும், அடுத்து நீங்கள் Login விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஒரு பயனர் தங்கள் விருப்பங்களை எவ்வாறு பதிவு செய்யலாம்?

  • பயனர்கள் சேவைகளை முழுமையாகத் தடுக்கவும் ஓரளவு தடுக்கவும் தங்களை பதிவு செய்யலாம் என்றும் Vi அறிவித்துள்ளது. 
  • தொலைத் தொடர்பு நிறுவனம் 1909 க்கு (கட்டணமில்லாது) செய்தி அனுப்புவதன் மூலமும் அல்லது 1909 (கட்டணமில்லா எண்) என்ற எண்ணை அழைப்பதன் மூலமும் இந்த DND சேவைகளைப் பெற உங்களை அனுமதிக்கிறது. 
  • மேலும், பயனர்கள் அதன் ஆப் வழியாக, மற்றும் TRAI பயன்பாடு 2.0 DND விருப்பத்தைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவார்கள். 
  • மேலும், டி.என்.டி விருப்பத்தின் சரியான நிலையை சரிபார்க்கவும் நிறுவனம் உங்களை அனுமதிக்கிறது.

Views: - 0

0

0

1 thought on “வோடபோனில் வேண்டாத நேரத்தில் தொல்லை செய்யும் கஸ்டமர் கேர் அழைப்புகளை தவிர்ப்பது எப்படி?

Comments are closed.