Facebook இல் உங்கள் Profile ஐ பூட்டி வைப்பது எப்படி?

14 September 2020, 12:53 pm
how to use profile lock in facebook
Quick Share

அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடக பயன்பாடுகளில் ஒன்றான பேஸ்புக் சமீபத்தில் இந்திய பேஸ்புக் பயனர் தளத்திற்காக புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், எந்தவொரு இந்திய பயனரும் இப்போது தங்கள் சுயவிவரத்தை ஈஸியாக லாக் செய்து வைத்துக்கொள்ள முடியும், இதனால் நண்பர்கள் மட்டுமே தங்கள் புகைப்படங்களையும் இடுகைகளையும் பார்க்க முடியும். மற்றவர்களுக்கு உங்கள் சுய விவரங்களைப் பார்ப்பதற்கான அனுமதி இருக்காது.

இந்த சுயவிவரத்தை பூட்டுவதற்கான அம்சம் என்பது குறிப்பாக பெண்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். ஏனென்றால், பெண்கள் தான் பேஸ்புக்  தளத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்த அம்சத்தை நீங்கள் இயக்கியதும், நண்பர்கள் அல்லாதவர்கள் உங்கள் புகைப்படத்தை பெரிதாக்கவோ, பகிரவோ அல்லது உங்கள் முழு அளவிலான சுயவிவரப் படத்தைப் பதிவிறக்கவோ அல்லது screenshot எடுக்கவோ முடியாது. இந்த அம்சம் உங்கள் நண்பர்கள் அல்லாதவர்களை உங்கள் டைம்லைனில் தனிப்பட்ட பதிவுகளைப் பார்ப்பதைத் தடுக்கும்.

இது தவிர, நீங்கள் கடந்த காலத்தில் பொதுவில் அதாவது Public என்று கொடுத்து பகிர்ந்த அனைத்து பதிவுகளும் நண்பர்களுக்கானதாக  மாறும். உங்களது About info எனப்படும் அறிமுக தகவலின் ஒரு பகுதி மட்டுமே சுயவிவர பக்கத்தில் அனைவருக்கும் தெரியும். இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த அம்சத்தை எப்படி இயக்க வேண்டும் என்று தானே  யோசிக்கிறீர்கள். அதற்காக தான் இந்தப் பதிவு.

முன்னதாக, Profile Picture Guard என்ற ஒரு அம்சத்தைப் பேஸ்புக் கொண்டு வந்தது, இது மற்றவர்கள் தங்கள் சுயவிவரப் படங்களை யாரும் டவுன்லோட் செய்யவோ ScreenShot எடுக்கவோ முடியாதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க உதவியது. Facebook இப்போது இந்த புதிய Profile Lock அம்சத்துடன் வந்துள்ளது. Android ஐப் பயன்படுத்தி பேஸ்புக்கில் சுயவிவரத்தைப் பூட்ட நீங்கள் பின்பற்றக்கூடிய சில படிப்படியான வழிமுறைகள் இங்கே.

  • முதலில் உங்கள் சாதனத்தில் பேஸ்புக் ஆப்பைத் திறக்கவும்.
  • அடுத்து, முகப்பு பக்கத்தில் உங்கள் Profile Picture ஐ அழுத்தவும்.
  • புதிய பக்கத்தில், மூன்று புள்ளிகள் உடன் தோன்றும் மெனு ஆப்ஷனை பிரெஸ் செய்யுங்கள்.
  • புதிய பக்கத்தில் கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து Lock Your Profile எனும் விருப்பத்தைத் தட்டவும்.
  • Lock Profile பக்கத்தில், பக்கத்தின் முடிவில் Lock Your Profile எனும் விருப்பத்தைத் தேர்வு  செய்யவும்.
  • “நீங்கள் உங்கள் சுயவிவரத்தை பூட்டியுள்ளீர்கள், உங்கள் டைம்லைனில் உள்ள புகைப்படங்களையும் பதிவுகளையும் உங்கள் நண்பர்கள் மட்டுமே பார்க்க முடியும்” என்று ஒரு செய்தி திரையில் தோன்றும்; அப்போது OK என்பதை பிரெஸ் செய்து உறுதிப்படுத்தவும்.

அவ்வளவுதான் உங்கள் Profile பூட்டப்படும். Lock Profile அம்சம் இயக்கப்பட்டதும், உங்கள் சுயவிவரத்தில் ஒரு அடையாளக்குரி ஒன்று தோன்றும், இது உங்கள் Profile  பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது.

ஆனால் இந்த அம்சத்தை நீங்கள் இயக்கியவுடன், Public விருப்பத்தில் ஒரு பதிவை எழுதவோ பகிரவோ முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதிவுகள் மற்றும் பகிர்வுகளை நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்துக்கொள்ள  முடியும்.

Views: - 11

0

0