உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் உள்ளதா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்…???

Author: Hemalatha Ramkumar
13 October 2021, 5:57 pm
Quick Share

தற்போது உள்ள சூழலில் வைரஸ் என்பது பொதுவானதாகி விட்டது. மனித உடலிலும் சரி, கேஜெட்களிலும் சரி. மனித உடலில் உள்ள வைரஸை டாக்டர்கள் பார்த்து கொள்வார்கள். இந்த பதிவில் உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப்களில் வைரஸ் உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என பார்க்கலாம். கம்ப்யூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்பட்ட முக்கியமான தகவலை அணுகவும், அதிலிருந்து பணம் சம்பாதிக்கவும் தீங்கிழைக்கும் சாஃப்வேர்களை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் இந்த விவரங்களை டார்க் நெட்டில் விற்று வருவாய் ஈட்டுகிறார்கள்.

கணினிகளைப் போலவே, ஸ்மார்ட்போன்களும் இந்த வைரஸ்களால் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக, தீங்கிழைக்கும் மால்வேர்கள் பயன்பாடுகள், விளம்பரங்கள் மற்றும் பல வடிவங்களில் வருகிறது.

பொதுவாக, ஆண்ட்ராய்டு சாதனங்கள் இந்த வைரஸ்கள் மற்றும் மால்வேர்களால் பாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. ஒரு தொலைபேசி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வது அவசியம். உங்கள் தொலைபேசி பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய எளிய வழி இல்லை என்றாலும், ஒரு சில அறிகுறிகள் மூலம் அதனை கண்டுபிடிக்கலாம்.

மால்வேர் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?
உங்கள் ஸ்மார்ட்போன் மால்வேர்களால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், இங்கே உள்ள சில குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

*வைரஸ் நிறைய பேக்கிரவுண்டு ஆப்களை இயக்கும் என்பதால் டேட்டாவின் அதிக பயன்பாடு இருக்கும். *மேலும், இது அடிக்கடி இணையத்துடன் தொடர்பு கொள்ளும்.
*தீங்கிழைக்கும் செயலிகள் மற்றும் சாஃப்ட்வேர் இருந்தால் பேட்டரி வேகமாக குறையும்.
*தீங்கிழைக்கும் மற்றும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் வைரஸ் அல்லது மால்வேரின் அடையாளமாக பாப் அப் செய்யும்.
*வழக்கமாக, பல தளங்களில் பாப்-அப் விளம்பரங்கள் இருக்கும். ஆனால் அதிக விளம்பரங்கள் உங்கள் சாதனத்திற்கு நல்ல அறிகுறியாக இருக்காது.
*உங்கள் தொலைபேசியின் முகப்புத் திரையில் புதிய பயன்பாடுகளின் வித்தியாசமான தோற்றம் இருக்கும்.
*இந்த புதிய பயன்பாடுகளில் மால்வேர் இருக்கலாம்.
*உங்கள் தொலைபேசி வழக்கத்தை விட மெதுவான செயல்திறனை வழங்கக்கூடும்.

Views: - 195

0

0

Leave a Reply