புத்தம் புதிய HP ஸ்மார்ட் டேங்க் சீரிஸ் பிரிண்டர்கள் அறிமுகம் | விவரங்கள் இங்கே

28 January 2021, 5:59 pm
HP introduces all-new Smart Tank series of printers in India
Quick Share

HP இன்று புதிய HP ஸ்மார்ட் டேங்க் 500 மற்றும் 516 ஆல் இன் ஒன் தொடர் மலிவு விலை பிரிண்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. HP ஸ்மார்ட் டேங்க் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள், வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு அலுவலக தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது புதிய சென்சார் அடிப்படையிலான இங்க் டேங்க் தொழில்நுட்பத்தால் (Ink Tank technology) இயக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இங்க் தீர்ந்து போகும் முன் பயனரை எச்சரிக்கப்படும்.

  • HP ஸ்மார்ட் டேங்க் 500 பிரிண்டர் HP ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ.11,999 ஆரம்ப விலையிலும், 
  • HP ஸ்மார்ட் டேங்க் 515 வயர்லெஸ் ரூ.14,499 ஆரம்ப விலையிலும் கிடைக்கிறது. 
  • HP ஸ்மார்ட் டேங்க் 516 வயர்லெஸ் பிரிண்டர் ரூ.15,266 என்கிற ஆரம்ப விலையிலும், 
  • HP ஸ்மார்ட் டேங்க் 530 வயர்லெஸ் பிரிண்டர் ADF உடன் ரூ .16,949 ஆரம்ப விலையிலும் கிடைக்கிறது.
HP introduces all-new Smart Tank series of printers in India

HP ஸ்மார்ட் டேங்க் பெட்டியில் INK சப்ளைகளுடன் வருகிறது, இது குறைந்தபட்சம் 6000 பக்கங்கள் (கருப்பு) / 8000 பக்கங்கள் (வண்ணம்) வெளியீட்டை 38% அதிகரிக்கப்பட்ட அச்சிடும் வேகத்தில் கொடுக்க முடியும். இது டூயல்-பேன்ட் வைஃபை மற்றும் HP ஸ்மார்ட் மொபைல் பிரிண்ட் (HP Smart mobile print) பயன்பாடு மற்றும் புளூடூத் SE மூலம் மேம்பட்ட மொபைல் அனுபவத்தையும் இணைப்பையும் வழங்குகிறது.

இணைய நெட்வொர்க்கின் தேவை இல்லாமல் ஸ்மார்ட்போனை பிரிண்டர் உடன் இணைக்க அனுமதிக்கும் வைஃபை நேரடி திறனும் இதில் இடம்பெற்றுள்ளது.

தனிப்பயனாக்கக்கூடிய ஷார்ட்கட்ஸ் விருப்பத்துடன் நெட்வொர்க் உடன் இணைப்பதில் உள்ள தொந்தரவை HP ஸ்மார்ட் ஆப் குறைக்கிறது. அனைத்து பிரிண்ட்களுக்கும் இருண்ட, கூர்மையான உரை மற்றும் துடிப்பான கிராபிக்ஸ் ஆகியவை கிடைக்கும், மேலும் நிறுவனத்தின் தகவலின் படி பார்டர் இல்லாத தொழில்முறை பிரசுரங்களையும் புகைப்படங்களையும் உருவாக்கலாம்.

HP ஸ்மார்ட் Tasks உதவியுடன் தொலைபேசி அல்லது பிரிண்டர்யில் தனிப்பயன் ஷார்ட்கட்ஸ் ஆதரவுடன் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய பணிகளுக்கான தேவையை இது நீக்குகிறது.

Views: - 2

0

0