ஹார்மனி OS 2, மேட்பேட் புரோ மற்றும் வாட்ச் 3 தொடர் அறிமுகம் | விவரங்கள் இங்கே

3 June 2021, 8:52 pm
Huawei announces HarmonyOS 2, MatePad Pro and Watch 3 series
Quick Share

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் தனது ஹார்மனி OS நிகழ்வில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

அந்நிகழ்வில் புதிய ஹார்மனிOS 2 operating system அறிமுகம் செய்ததுடன், நிறுவனம் மேட் பேட் புரோ (12.6 இன்ச்) டேப்லெட், வாட்ச் 3 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் மேட் பேட் புரோ (10.8 இன்ச்) ஐ சமீபத்திய மென்பொருளுடன் புதுப்பித்துள்ளது.

தற்போதுள்ள 100 க்கும் மேற்பட்ட சாதனங்களை ஹார்மனிOS 2 உடன் மேம்படுத்தும் திட்டத்தையும் ஹவாய் அறிவித்துள்ளது.

ஹவாய் நிறுவனத்தின் சமீபத்திய ஹார்மனி OS 2 ஸ்மார்ட்போன்கள் முதல் கடிகாரங்கள் மற்றும் IoT சாதனங்கள் வரையிலான அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தப்படும்.

OS புதுப்பிக்கப்பட்ட UI மற்றும் கண்ட்ரோல் பேனல், புதிய விட்ஜெட்டுகள் மற்றும் யுனிவர்சல் கார்டு செயல்பாடு, One-Tap ஸ்மார்ட் ஹோம் சாதனக் கட்டுப்பாடுகள் மற்றும் ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு பணிப்பாய்வு மாற்றுவதற்கான ஒரு Task Center ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.

மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமையுடன் குறைந்த பேட்டரி நுகர்வு அம்சமும் உள்ளது.

ஹவாய் மேட்பேட் புரோ – விவரங்கள்

ஹவாய் மேட்பேட் புரோ குறுகிய பெசல்களுடன் மெலிதான வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் இரண்டாம் தலைமுறை M-பென்சில் ஸ்டைலஸை ஆதரிக்கிறது.

இது 13MP டிரிபிள் கேமரா யூனிட் 3D டெப்த்-சென்சிங் ஃபங்க்ஷன் மற்றும் 8MP முன் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த டேப்லெட்டில் 12.6 இன்ச் OLED டிஸ்ப்ளே 90% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் DC டிம்மிங் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது சில்வர் ஃப்ரோஸ்ட், மேட் கிரே, ஆலிவ் கிரீன் கலர் விருப்பங்களில் வழங்கப்படுகிறது.

ஹவாய் மேட்பேட் புரோவின் 5 ஜி மற்றும் வைஃபை மட்டும் கொண்ட வகைகள் முறையே கிரின் 9000 மற்றும் 9000E செயலி உடன் இயக்கப்படுகின்றன, இவை 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளன.

உட்புறத்தில், இது ஹார்மனி OS 2 இல் இயங்குகிறது மற்றும் 10,050 mAh பேட்டரியை பேக் செய்கிறது.

டேப்லெட் வைஃபை 6, புளூடூத் 5.2, டைப்-C போர்ட் மற்றும் மல்டி ஸ்கிரீன் ஒத்துழைப்புக்கான ஆதரவையும் வழங்குகிறது. இதில் நான்கு மைக்ரோஃபோன்கள் மற்றும் எட்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹவாய் வாட்ச் 3

ஹவாய் வாட்ச் 3 மெலிதான பெசல்கள், ஒரு துருப்பிடிக்காத ஸ்டீல் பாடி மற்றும் வழிசெலுத்தலுக்காக பக்கத்தில் 3D சுழலும் கிரீடம் கொண்ட வட்ட டயல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

நிலையான மாடல் 1.43 அங்குல AMOLED தொடுதிரை 1,000-நைட் பிரகாசம் மற்றும் 3 நாள் பேட்டரி ஆயுள் கொண்டது.

புரோ வேரியண்ட்டில் டைட்டானியம் உடலமைப்பு மற்றும் கீறல்-எதிர்ப்பு சபையர் கிளாஸ் உள்ளது. இது 5 நாள் பேட்டரி ஆயுள் மற்றும் டூயல்-பேன்ட் GPS இணைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.

ஹூவாய் வாட்ச் 3 மற்றும் 3 ப்ரோ இதயத் துடிப்பு மற்றும் SpO2 கண்காணிப்பு, 100 க்கும் மேற்பட்ட ஒர்க்அவுட் முறைகள், மன அழுத்தம் மற்றும் தூக்க கண்காணிப்பு மற்றும் தோல் வெப்பநிலை கண்காணிப்பு உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது. இது ஒரு உள்ளமைக்கப்பட்ட வாய்ஸ் அசிஸ்டன்ட், e-SIM இணைப்பு மற்றும் ரிமோட் கேமரா ஷட்டர் கட்டுப்பாட்டு செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விலை விவரங்கள்

ஹவாய் மேட்பேட் புரோ (12.6-இன்ச்) வைஃபை மட்டும் / 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் CNY 4,999 (ரூ.57,000) விலையில் தொடங்கி 5ஜி / 256 ஜிபி வேரியண்டிற்கு CNY 7,999 (ரூ. 91,500) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூன் 10 முதல் விற்பனைக்கு வரும்.

ஹவாய் வாட்ச் 3 மற்றும் 3 ப்ரோ முறையே CNY 2,599 (ரூ.29,700) மற்றும் CNY 3,299 (ரூ.37,700) விலைகளில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் ஜூன் 11 முதல் கிடைக்கும்.

Views: - 134

0

0