வயர்லெஸ் சார்ஜிங் மூலம் இயங்கும் இ-பைக் | ஹைதராபாத் கே.எல் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை

Author: Dhivagar
28 June 2021, 7:57 am
hyderabad KL university wireless charging electric bike
Quick Share

ஹைதராபாத்தைச் சேர்ந்த கே.எல் பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்கள் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் தனித்துவமான இ-பைக் (மின்சார பைக்) ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த புதுமையான முன்மாதிரி கே.எல். பொறியியல் கல்லூரியின் மின்சார மற்றும் மின்னணு பொறியியல் துறையைச் சேர்ந்த மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் 6 மாணவர்கள் மற்றும் ஒரு சில பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

hyderabad KL university wireless charging electric bike

இந்த இ-பைக்கில் cell balancing மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல எதிர்கால நோக்குடனான அம்சங்கள் உள்ளன, அவை உலகிலேயே வெகு சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன. கே.எல். பல்கலைக்கழகத்தில் உள்ள அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் சோதனை வசதிகளுக்கான இலவச அணுகலைப் பயன்படுத்தி ஆரம்பக் கருத்தாக்கத்தையும் முன்மாதிரியையும் இந்த குழு உருவாக்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் நிபுணர்களிடமிருந்தும் மூத்த கல்வியாளர்களிடமிருந்தும் வழிகாட்டல் மற்றும் நிலையான கருத்துக்களைப் பெற்று இந்த மின்சார பைக்கை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த திட்டத்திற்கென பல்கலைக்கழகத்தின் சார்பில் 1,40,000 ரூபாய் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

hyderabad KL university wireless charging electric bike

கே.எல். பல்கலைகழக மாணவர்கள் குழு உருவாக்கிய இ-பைக் நிலையான சாலை பகுதிகளில் 85 முதல் 100 கி.மீ வரை செல்லக்கூடிய சார்ஜிங் திறன் கொண்டது. அதே சமயம் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. 

இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகமாகி வருவதை அடுத்து மின்சார பைக்குகளுக்கான பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது போன்ற சமயத்தில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் ஒரு பைக்கை உருவாக்க மிகப்பெரிய நிறுவனங்களே திணறி கொண்டிருக்கும் வேளையில் இந்த மாணவர்கள் மிகப்பெரிய முயற்சியை கையிலெடுத்து வெற்றிபாதையில் கொண்டு சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க உள்ளனர்.

Views: - 253

0

0