ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் முன் அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கைகளை காதில் கேட்டுக்கோங்க

16 November 2020, 9:04 pm
If you are fond of shopping online, this warning of the government may open your eyes
Quick Share

பல வகையான மோசடிகள் உள்ளன, ஆனால் தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அதிகம் நடப்பது ஆன்லைன் மோசடி தான். ஆன்லைன் ஷாப்பிங்கின் போது பெரும் தள்ளுபடி வழங்குவதாக கூறும் ஒரு ஆன்லைன் விளம்பரத்தை நீங்கள் கண்டால், என்ன ஏதென்று  தெரியாமல் உங்கள் தனிப்பட்ட விவரங்களையெல்லாம் கொடுத்தால் மோசடி செய்பவர்களிடம் நீங்கள் முட்டாளாகும் நிலை தான் ஏற்படும். மேலும் பணத்தையும் பறிகொடுக்க நேரிடும். 

உள்துறை அமைச்சகம் “Cyber Dost” என்ற ட்விட்டர் கணக்கைக் கொண்டிருக்கிறது. இந்த கணக்கின் மூலம், மோசடிகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்க அரசாங்கம் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

சைபர் தோஸ்த் ட்விட்டர் பதிவின் மூலம் சமூக ஊடக பயனர்களுக்கு 4 முக்கியமான உதவிக்குறிப்புகளை வழங்கியுள்ளது, அதில் தங்கள் கணக்கை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் ஆன்லைன் மோசடிகளை எப்படி தவிர்ப்பது என்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. 

  1. ஏராளமான போலி வலைத்தளங்கள் உள்ளன. அதிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்.
  2. நீங்கள் பார்வையிடும் வலைத்தளம் சரியானது தானா என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
  3. போலியான வலைத்தளங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
  4. போலியாக கட்டணம் கேட்கும் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்யாதீர்கள்.

பண்டிகை காலங்களில் நாடு முழுவதும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மோசடி செய்வதற்காக மோசடி செய்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கக்கூடும். 

If you are fond of shopping online, this warning of the government may open your eyes

இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் ஏதேனும் பொருட்களை வாங்கும்போது, இந்த ஆன்லைன் மோசடியைத் தவிர்க்க முடியும்.

சமூக ஊடகங்கள் பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் நடைபெறும் ஒரு தளம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். என்னதான் சமூக ஊடக தளங்கள் தொடர்ந்து இந்த பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், மோசடி செய்பவர்கள் சில புதிய வழிகளை கண்டுபிடித்து மக்களை ஏமாற்றுகின்றனர். அது போன்ற நேரத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

ஃபிஷிங் தாக்குதல்களைத் தவிர்க்குமாறு இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு அறிவுறுத்தியுள்ளது. CRET-In ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது, இதிலிருந்து ஆன்லைன் மோசடியை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்த தகவல்களை வெளியிட்டு.

Views: - 20

0

0

1 thought on “ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் முன் அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கைகளை காதில் கேட்டுக்கோங்க

Comments are closed.