அட இப்படி பண்ணினா பாஸ்வேர்டு இல்லாம உங்க போனை அன்லாக் செய்யலாம்!

27 February 2021, 4:38 pm
In this way, you can unlock any phone without password!
Quick Share

பல முறை, நம் ஸ்மார்ட்போனை அவசரமாக அன்லாக் செய்யும் போது, பாஸ்வேர்டு அல்லது பேட்டர்ன் லாக்கை மறந்துவிடுவோம். ஆனால் இது போன்ற சமயத்தில் உங்கள் போனை அன்லாக் செய்ய ஒரு ட்ரிக் இருக்கு. அதை தான் நாம் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெறும் 5 ஸ்டெப்பில் பாஸ்வேர்டு இல்லாமல்  அன்லாக் செய்ய. 

1. முதலில் உங்கள் ஸ்மார்ட்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுங்கள்.

2. இப்போது ஒரே சமயத்தில் தொலைபேசியின் மேல் வால்யூம் பட்டனையும் பவர் பட்டனையும் அழுத்திப் பிடியுங்கள்.

3: இப்போது நீங்கள் உங்கள் போனின் திரை 5 விருப்பங்களைக் காண்பீர்கள்:

அவற்றில்

1) Reboot data

2) Wipe Data / Factory reset

3) Install update

4) Power down

5) Advanced options

போன்ற ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும்.

அதில் நீங்கள் Wipe Data / Factory reset எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. இவற்றில், Wipe Data / Factory reset விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு OK விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இதை நீங்கள் செய்தால், உங்கள் ஸ்மார்ட்போனின் தரவு அனைத்தும் நீக்கப்படும் என்பதையும்  நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

5: அதன் பிறகு உங்கள் ஸ்மார்ட்போனை Restart செய்யுங்கள். இப்போது உங்கள் ஸ்மார்ட்போன் unlock ஆகி இருக்கும்.

அவ்வளவுதான்…. சிம்பிள்!

Views: - 1

0

0