அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி | DRDO தகவல் | Agni P Missile

Author: Dhivagar
28 June 2021, 4:29 pm
India successfully test-fires Agni P, a new missile in Agni series
Quick Share

அக்னி ஏவுகணை தொடரில் புதிதாக இணைந்துள்ள அக்னி பிரைம் எனும் அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்து வெற்றி அடைந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று (28-ஜூன்) காலை 10.55 மணியளவில் ஒடிசா கடற்கரைக்கு கிழக்கே அமைந்துள்ள பத்ரக் அப்துல் கலாம் தீவில் உள்ள 4 ஆம் ஏவுதளத்தில் இருந்து இந்த அக்னி பிரைம் ஏவுகணை ஏவப்பட்டது.

டி.ஆர்.டி.ஓ ஏவும் புதிய வகை அக்னி ஏவுகணைகளில் அக்னி P முதன்மையானது. இந்த அணு ஆயுத ஏவுகணையான அக்னி பிரைம், அக்னி 3 ஏவுகணையை விட 50% எடை குறைவானது மற்றும் புதிய வழிகாட்டுதலையும் புதிய தலைமுறை உந்துவிசையையும் கொண்டுள்ளது. 

சோதனையில் அக்னி பிரைம் ஏவுகணை, திட்டமிட்ட  இலக்குகளை மிகச் சரியாக அடைந்து சிறப்பாக செயல்பட்டதாக DRDO அதிகாரிகள் தெரிவித்தனர். 

அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணை சுமார் 1000 முதல் 2000 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 373

0

0