டிக்டாக் உட்பட 59 சீன பயன்பாடுகள் மீண்டும் வர வாய்ப்பே இல்லை!

26 January 2021, 3:26 pm
India to impose permanent ban on 59 Chinese apps, including TikTok
Quick Share

குறுகிய வீடியோ பயன்பாடான டிக்டாக் மற்றும் பிற 58 சீன பயன்பாடுகளுக்கு கடந்த ஜூன் மாதத்தில் விதித்த தடையை நிரந்தரமாக்க இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலில் தடை விதிக்கப்பட்டபோது, 59 பயன்பாடுகளும் தனியுரிமை மற்றும் பாதுகாப்புத் கொள்கைகளை பின்பற்றவில்லை என்று ​​இந்திய அரசு விளக்கமளித்து இருந்தது.

பைட் டான்ஸின் பிரபலமான குறுகிய வீடியோ பகிர்வு பயன்பாடான டிக்டாக், டென்சென்ட் ஹோல்டிங்ஸின் வீ-சேட் மற்றும் அலிபாபாவின் UC பிரௌசர் உள்ளிட்ட நிறுவனங்களிடம் அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்தது. 

இந்த நிறுவனங்கள் அளித்த பதில் / விளக்கத்தில் அரசாங்கம் திருப்தியடையவில்லை. எனவே, இந்த 59 பயன்பாடுகளுக்கான தடை இப்போது நிரந்தரமாகியுள்ளது. 

இந்த பயன்பாடுகள் “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடியவை என்று அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது.

கால்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்ற போரின் காரணமாக 20 இந்திய  வீரர்கள் வீர மரணம் அடைந்ததை அடுத்து  முதலில் அந்த 59  சீன பயன்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அடுத்தது இந்த தடை நடவடிக்கைத் தொடர்ந்து நடந்து வந்தது. 

செப்டம்பரில், டென்செண்டின் பிரபலமான வீடியோ கேம் ஆன PUBG உட்பட மேலும் 118 மொபைல் பயன்பாடுகளை இந்திய அரசு தடை செய்தது, எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

மக்களால், மிகவும் விரும்பப்பட்ட பல செயலிகள் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட்ட நிலையில், இப்போது இந்த தடை உத்தரவு நிரந்தரமாகியுள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட சீன செயலிகள் மீண்டும் வர வாய்ப்பே இல்லை.

Views: - 10

0

0