கொரோனா நோயாளிகள் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள உதவும் இயந்திர “நண்பன்”! எப்படி தெரியுமா?

21 September 2020, 11:17 am
Indian Hospital Deploys “Mitra” Robot to Help Patients Communicate With Family
Quick Share

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, பல்வேறு சுகாதார மற்றும் பொது இடங்களில் ஹியூமனாய்டு ரோபோக்கள் மருத்துவ ஊழியர்களுக்கு உதவவும் மற்றும் அசுத்தமான பகுதிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது, ​​இந்தியாவில் ஒரு மருத்துவமனை தனது நோயாளிகளுக்கு நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் ஒரு அழகான மற்றும் பயனுள்ள ரோபோவை அதன் வளாகத்தில் பயன்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த இன்வென்டோ ரோபாட்டிக்ஸ் (Invento Robotics) உருவாக்கிய “மித்ரா” தான் அந்த ஹியூமனாய்டு ரோபோ ஆகும், இது நோயாளிகளுக்கு உதவுவதற்காக மருத்துவமனையைச் சுற்றி வருகிறது. இந்தியில் உள்ள ரோபோவின் பெயருக்கு “நண்பன்” என்று பொருள். உண்மையில், தங்கள் குடும்பத்தினருடன் பேச விரும்புவோருக்கு இந்த ரோபோ ஒரு நண்பனாகவே இருந்து உதவுகிறது. எனவே, COVID-19 அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்ட நீண்டகால நோயாளிகளுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய இந்த ரோபோ உதவுகிறது.

உற்றநேரத்தில் உதவும் நண்பன்

இப்போது, இந்த ​​ரோபோவைப் பற்றி பார்க்கலாம். “மித்ரா” அதன் கூர்மையான கண்களுக்குள் இரண்டு முக அங்கீகார கேமராக்களுடன் வருகிறது. இது ரோபோவுக்கு ஊழியர்கள் மற்றும் மருத்துவமனையின் நோயாளிகளின் முகங்களை நினைவில் வைக்க உதவுகிறது.

அதன் மார்பில் டேப்லெட் இணைக்கப்பட்டது போன்ற சாதனம் உள்ளது. அது  நோயாளிகளுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான வீடியோ அழைப்புகளை செய்ய உதவுகிறது.

இது முக்கியமாக ஸ்மார்ட்போன்களுக்கான அணுகல் இல்லாத அல்லது ஒன்றைப் பயன்படுத்த முடியாத நோயாளிகளுக்கு உதவும் நோக்குடன் உள்ளது. உதாரணமாக, அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ரோபோ பல வயதானவர்களுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதற்கு உதவியது. மேலும், பல சிறப்பு மருத்துவர்கள் நோய்த்தொற்று அபாயத்தைக் குறைக்க தங்கள் நோயாளிகளுடன் தொலைநிலை ஆலோசனைகளுக்கு ரோபோவைப் பயன்படுத்துகின்றனர்.

COVID நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஓய்வுபெற்ற அரசாங்க நிர்வாகி தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள இந்த ரோபோவைத் தான் பயன்படுத்தினார் மற்றும் இதனால் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.

​​அறிக்கையின்படி, இந்த ரோபோக்களில் ஒன்றை வாங்க மருத்துவமனை நிர்வாகம் இன்வென்டோ ரோபாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.1,00,000 ($13,600) செலவழிக்க வேண்டியிருந்தது.

Views: - 8

0

0