கொரோனா முடிந்தாலும் ஆன்லைன் கல்வி முறை இப்படியே இருக்கட்டும்…இது தான் அதிக பெற்றோர்களின் விருப்பமாம்!|உங்கள் கருத்து என்ன?
6 August 2020, 8:47 amஇந்திய நாட்டிலேயே உருவான எட்-டெக் நிறுவனமான BYJU’S இன் ஒரு கணக்கெடுப்பு, இந்திய பெற்றோர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் குழந்தைகள் தொற்றுநோய் பிரச்சினை எல்லாம் முடிந்த பிறகும் வீட்டிலேயே தொடர்ந்து online school மூலம் கல்வி கற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கூறுகிறது.
கணக்கெடுப்பின்படி, 75% பெற்றோர்கள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரும் தங்கள் குழந்தைகள் ஆன்லைனிலேயே தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
ஜூன் 2020 இல் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, 18 நகரங்களில் உள்ள பெற்றோரிடமிருந்து 5,000 க்கும் மேற்பட்ட பதிலளிப்புகளைப் பெற்றது. பதிலளித்தவர்களுக்கு KG மற்றும் 12 ஆம் வகுப்புக்கு இடையில் குறைந்தது ஒரு பள்ளி பயிலும் குழந்தை இருந்தது.
கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகள் குறித்து BYJU’S இன் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் கூறிகையில்: “ஊரடங்கின் போது முதன்முறையாக ஆன்லைன் கற்றலை முயற்சிக்க பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு பாதுகாப்பு வலுவான தூண்டுதலாக கருதப்பட்டது.
ஆனால் உண்மையான மனநிலை மாற்றம் நிகழ்ந்துள்ளது, ஏனெனில் சரியான நேரத்தில் டிஜிட்டல் கற்றலின் online school செயல்திறனை பெற்றோர்கள் கண்டிருக்கிறார்கள் ” என்று தெரிவித்தார்.
கணக்கெடுக்கப்பட்ட பெற்றோர்களில் 78% பேர் தங்கள் பள்ளிகளால் நடத்தப்படும் ஆன்லைன் பாடங்களில் கலந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தை அவர்களின் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தது ஒரு ஆன்லைன் தளத்தையும் (கள்) பயன்படுத்துவதாகக் கூறினர்.
ஆன்லைன் கற்றல் குறித்து இந்திய பெற்றோரின் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலைமையின் காரணமாக, பெரும்பாலானவர்கள் ஆன்லைன் கற்றலை தங்கள் குழந்தைகளுக்கு புதிய இயல்பாக ஏற்றுக்கொண்டனர்.
கிட்டத்தட்ட 70% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முதல் முறையாக ஊரடங்கின் போது ஆன்லைன் கற்றலைப் (online school) பயன்படுத்தினர் என்பதை தெரிவித்தனர், 63% பேர் இந்த காலகட்டத்தில் ஆன்லைன் கற்றல் பயனளிப்பதாக உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
61% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைன் கற்றலை முயற்சிக்க மற்ற பெற்றோர்களையும் பரிந்துரைப்பதாகக் கூறியுள்ளனர். இந்த வடிவம் மிகவும் ஊடாடும் வகையில் உள்ளது என்றும் பெற்றோர்களும் உணர்ந்தனர். மேலும் தங்கள் குழந்தைகள் சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவும் அட்டவணை மற்றும் வடிவமைப்பின் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
ஒரு ஆன்லைன் கல்வி முறையே வந்தால்?
- சரி, இதெல்லாம் இருக்கட்டும். இதுவே தொடர்ந்து நடந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்க்கலாம்.
- ஏற்கனவே இருக்கும் ஆன்லைன் கற்றல் (online school) தளங்கள் நன்கு வளர்ச்சி பெறும்.
- பள்ளி உரிமையாளர்களும், பள்ளிகளுக்கு செலவு செய்வதை விட்டுவிட்டு ஆன்லைன் கற்றல் தளங்களைத் தொடங்க முயற்சி செய்வார்கள்.
- Practical அனுபவம் என்பது குறைந்து விடும்.
- மாணவர்கள் ஒரு அறைக்குள்ளேயே அடைப்பட்டு, வெளியுலக அனுபவமும், நண்பர்கள் கூட்டமும் பெரிதும் இல்லாமலேயே இருப்பார்கள்.
- அனைத்து கல்வி முறையும் ஆன்லைனிலேயே இருந்து விட்டால், சமூக கற்றல் என்பது குறைந்துவிடும்.
- இதையெல்லாம் விட, கட்டணம் குறைவாக உள்ளதென்று இந்த முறை வேண்டும் என்று சொல்லும் பெற்றோர், இது மட்டுமே கல்வி முறை என்றால் அதிகரிக்கப்போகும் கட்டணம் பற்றி யோசிக்கவில்லையே! இன்னும் என்னென்னவோ …
சரி, வரும்காலங்களில் நிலைமைகள் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். இது குறித்து உங்கள் கருத்துகள் என்ன என்பதையும் கமெண்டில் பதிவிடுங்கள்.
இதையும் படிக்கலாமே: இந்த டச்-ஸ்கிரீனை தொடாமலே பயன்படுத்தலாம்! “நோ-டச் டச்ஸ்கிரீன்” அறிமுகம் | வீடியோவை காண கிளிக் செய்க(Opens in a new browser tab)