நிலவுலயே வீடு கட்ட கல் ரெடி! வெளியானது புதிய ஆராய்ச்சி தகவல்!

Author: Dhivagar
30 March 2021, 5:24 pm
Indian researchers develop 'space bricks' for lunar habitation
Quick Share

சந்திரனுக்குச் செல்வது என்பது பல ஆண்டுகளாக ஒரு கட்டுக்கதையாகவும் புனைகதையாகவும் மட்டுமே இருந்த ஒரு விஷயம். ஆனால், நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வின் இ ஆல்ட்ரின் ஆகியோர் 1969 ஆம் ஆண்டில் சந்திரனில் கால் பதித்த பிறகு கட்டுக்கதைகள் எல்லாம் சரித்திரம் பேசும் கதைகளாக மாறிபோயின. அதையடுத்து பல விண்வெளி பயணங்கள் நிகழ்ந்துள்ளன. மனிதர்கள் சந்திரனில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய பல ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

இது போன்ற ஆய்வுகளில் இந்தியாவும் ஈடுபட்டுள்ள நிலையில் நிலவில் வீடுகளை நிறுவுவதற்கான ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. இதற்கிடையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு சந்திரனில் வீடுகளைக் கட்ட ஒரு வகையான கட்டுமான கல்லைக் கண்டுபிடித்துள்ளது. சந்திரனில் முதன் முதலில் தரையிறங்கிய அப்பல்லோ விண்கலம் எடுத்து வந்த லூனார் ரெகோலித் சிமுலண்ட் உடன் 96.6 சதவீதம் இணக்கமானதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இந்த கட்டுமான கல்லை உருவாக்கியுள்ளது. இந்த கல் விண்வெளி கட்டுனமான கல் அதாவது Space Bricks என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இது குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக, இந்த கட்டுமான கல்லை நிலவின் மண்ணுக்கு மாற்றாக பயன்படுத்த முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கட்டுமான கல் பாக்டீரியாவால் தயாரிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு இணக்கமான கட்டுமான தொழில்நுட்பமான உயிரியக்கவியல் மூலம் இந்த கட்டுமான கல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நுட்பத்தில் தூள் ஆக இருக்கும் லூனார் ரெகோலித் சிமுலண்டை 15 முதல் 20 நாட்களுக்குள் ஒரு செங்கலாக பயோசிமென்டேஷன் (Biocementation) என்ற முறையில் உருவாக்கியுள்ளனர். குறைந்த ஈர்ப்பு விசையின் கீழ் இந்த கல் எவ்வாறு நிலைக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்துள்ளனர். 

அப்புறம்  என்ன… வீடு கட்ட கட்டுமான கல் ரெடி பணியாச்சு. இனிமே வீடு கட்டிட வேண்டியதுதான்.

Views: - 226

0

0