சமூக வலைத்தளங்களில் Myntra வுக்கு எதிராக போராட்ட முழக்கம்! காரணம் இதுதான்!

Author: Hemalatha Ramkumar
23 August 2021, 6:00 pm
Indian Twitter Wants to Boycott Myntra for Old Anti-Hindu Poster
Quick Share

பிளிப்கார்ட், அமேசான் போன்று இந்தியாவில் ஆடைகளுக்கென பிரபலமான செயலி தான் மிந்த்ரா. இந்த செயலி, முன்னதாக அதன் பெயர் பலகையினால் சர்ச்சையில் சிக்கியது. அதையடுத்து, இப்போது மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த முறை என்ன சிக்கல், என்ன காரணம், மிந்த்ரா நிறுவனத்தின் பதில் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.   

இன்று ட்விட்டர், பேஸ்புக் உட்பட பல சமூக வலைத்தளங்களில் மிந்த்ரா செயலியைத் தடை செய்ய வேண்டும், எல்லோரும் இந்த மிந்த்ரா செயலியை Uninstall செய்து விடுங்கள் என்ற கோஷம் #BoycottMyntra #UninstallMyntra என்ற ஹேஷ்டேக்குகளாக மாறி ட்விட்டரில் ட்ரெண்டானது. இதற்கு என்ன காரணம் என்று பாரதத்தில் ஒரு புகைப்பட விளம்பரம் தான்.

அப்படி அந்த விளம்பரத்தில் என்ன தான் உள்ளது என்று பார்க்கையில், மஹாபாரதத்தில் பாஞ்சாலி துயில் உரியப்படும் போது, சேலை தந்து உதவ கிருஷ்ணன் மிந்த்ரா செயலியில் Extra Long Sarees என்று தேடுவது போன்று இருந்தது.

ஆனால் இந்த விளம்பரத்தை, மிந்த்ரா உருவாக்கவில்லை என்றும், “ScrollDroll” எனும் விளம்பர ஏஜென்சி தான் உருவாக்கியது என்றும் “ScrollDroll” ஏஜென்சியே ஒப்புக்கொண்டுள்ளது. இந்த விளம்பரத்துக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்றும் மிந்த்ரா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 

ஏற்கனவே 2016 ஆண்டிலேயே இந்து மதத்தை அவமதித்ததாக மிந்த்ரா நிறுவனம் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், மிந்தரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், சில நெட்டிசன்கள் சமரசம் அடைந்ததாக தெரியவில்லை.

Views: - 651

0

0